மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 123.231.90.77 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1096711 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது '''இதயத்திசு இறப்பு''' அல்லது '''இதயத்தசை இறப்பு''' (''Myocardial infarction'') ஏற்படுகிறது. இது பெரும்பாலும் [[முடியுருக் குருதிச்சுற்றோட்டம்|முடியுருத் தமனி]]யில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற [[கொழுப்பு]]ப் பொருட்களும் [[வெள்ளை அணுக்கள்|வெள்ளைக் குருதி அணுக்களும்]] சேர்ந்து உட்புறத்தில் [[வீக்கத்தழும்பு]] உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை [[தமனிக்கூழ்மைத் தடிப்பு]] என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு [[குருதி|குருதியே]] செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு [[நெஞ்சுவலி]] ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை [[மார்பு நெரிப்பு]] என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் [[குருதி உறைதல்|குருதி உறைந்து]] [[குழலியக்குருதியுறைமை]] ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.
 
இதயத்தசை இறப்பை ''இதயக் கோளாறு'', ''மாரடைப்பு'' போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிட்டாலும் மாரடைப்பு எனப்படுவது மார்பு நெரிப்பு, இதயத்தசை இறப்பு ஆகிய இரு சூழல்களையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கில் இருந்து வருகின்றது. இதயத்தசை ஒருவகை இழையம் ([[திசு]]) என்பதால் இதயத்திசு இறப்பு என்றும் அழைக்கிறோம். திடீர் இதய இறப்பு என்பதுமற்றும் [[இதய நிறுத்தம்]] என்பன இதயத்தசை இறப்புக் காரணமாகவும் வரலாம்,; [[இதயத்தடுப்பு]], குறுநடுக்கம் போன்ற வேறு காரணங்களாலும் வரலாம்.
 
கடுமையான மாரடைப்பிற்கான மரபார்ந்த அறிகுறிகள்: திடீர் நெஞ்சு வலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கும் பரவும்), மூச்சு திணறுதல், குமட்டுதல், வாந்தி, வியர்த்தல், மனக்கலக்கம் ஆகியவையாகும்<ref name="Mallinson 2010 15">{{cite journal | last=Mallinson | first=T | title=Myocardial Infarction | journal=Focus on First Aid | volume= | issue=15 | pages=15 | year=2010 | pmid= | url=http://www.focusonfirstaid.co.uk/Magazine/issue15/index.aspx | accessdate=2010-06-08 | doi= }}</ref>. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் குறைவான குறிப்பிடத்தக்க அறிகுறிகளை (பொதுவாக மூச்சு திணறுதல், தளர்ச்சி, செரிமானமற்ற ([[அஜீரணம்|அஜீரண]]) உணர்வு, உடல் சோர்வு) ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்<ref name="Kosuge">{{cite journal | last=Kosuge | first=M | coauthors= Kimura K, Ishikawa T et al. | title=Differences between men and women in terms of clinical features of ST-segment elevation acute myocardial infarction | journal=Circulation Journal | volume=70 | issue=3 | pages=222–226 | date=March 2006 | pmid=16501283 | url=http://www.jstage.jst.go.jp/article/circj/70/3/222/_pdf | accessdate=2008-05-31 | doi=10.1253/circj.70.222 }}</ref>. ஏறக்குறைய கால் பங்கு மாரடைப்பு நிகழ்வுகள் நெஞ்சு வலி அல்லது மற்ற அறிகுறிகளில்லாமல் அமைதியாவே நடக்கின்றன<ref name="Kannel-1986">{{cite journal | author=Kannel WB. | title=Silent myocardial ischemia and infarction: insights from the Framingham Study | journal=Cardiol Clin | year=1986 | volume=4 | issue=4| pages=583–91 | pmid=3779719}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது