இறுதி முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''இறுதி முற்றுகை''' (''Checkmate'') என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] ([[சதுரங்கம் (இந்திய பாரம்பரிய விளையாட்டு)|சதுரங்கக்]] குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும்) ஒரு போட்டியாளரின் [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும். எளிமையாகக் கூறுவதானால், [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] நேரடித் தாக்குதலிலமைந்து கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட முடியும். [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] இறுதி முற்றுகைக்காளாக்குவதே ஒரு போட்டியாளரின் முக்கிய நோக்கம் ஆகும். இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட போட்டியாளர் போட்டியில் தோல்வியடைவார். பொதுவான சதுரங்கத்தில் [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] கைப்பற்றப்படுவதில்லை. அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டவுடனேயே போட்டி முடிவுறும். ஏனெனில், அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட பிறகு அப்போட்டியாளரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. சில போட்டியாளர்கள் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்து இறுதி முற்றுகைக்காளாக்கப்பட முன்னரே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதுண்டு.
 
அரசன் தாக்குதலின் கீழிருந்தும் அதனைத் தடுக்க முடியுமாயின், அது [[முற்றுகை (சதுரங்கம்)|முற்றுகை]] என்றே (இறுதி முற்றுகை என்றல்ல.) அழைக்கப்படும். போட்டியாளரின் [[அரசன் (சதுரங்கம்)|அரசன்]] [[முற்றுகை (சதுரங்கம்)|முற்றுகை]]க்காளாகாதவிடத்தும் அவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வைச் செய்ய முடியாதவிடத்து அந்நிலை சாத்தியமான நகர்வற்ற நிலை எனப்படும். இதன்போது போட்டி சமநிலையில் முடிவடையும்.
 
இயற்கணிதக் குறியீட்டு முறையில் இறுதி முற்றுகையானது எண் குறியீட்டின் (<nowiki>#</nowiki>) மூலம் காட்டப்படும் (எ-டு: ''42.Qh6#'').
 
==எடுத்துக்காட்டுகள்==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இறுதி_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது