இரணியகசிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
உலகத்திலுள்ள அனைவரும் தன்னை “ஓம் நமோ இரண்யாய நமஹ” என்று துதிபாடும்போது தன்னை அவமதித்து ”ஓம் நமோ நாராயணாய நமஹ” என்று சொல்லும் பிள்ளையை ஒழித்தால்தான் தன் மானம் காக்கப்படும் என்று நினைத்து இரணியனும் பிரகலாதனிடம் தன்னுடைய விரோதியின் பெயரைச் சொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டான். ஆனால் பிரகலாதன் இரணிய நாமம் சொல்ல மறுத்து நாராயண நாமம் சொல்லி, தந்தைக்கே உபதேசம் செய்ய ஆரம்பித்தான். நாராயணனே தெய்வம் என்றான். ஆகவே கடுங்கோபம் கொண்ட இரணியன் பிரகலாதனைக் கொன்று விடும்படி உத்தரவிட்டான்.<ref>[http://srimadbhagavatam.com/7/8/6/en1 Bhag-P 7.8.6]</ref><ref>[http://srimadbhagavatam.com/7/8/3-4/en1 Bhag-P 7.8.3-4] "Thus he finally decided to kill his son Prahlada. Hiranyakasipu was by nature very cruel, and feeling insulted, he began hissing like a snake trampled upon by someone's foot."</ref> ஒவ்வொரு முறையும் தன் பக்தன் பிரகலாதனை நாராயணன் காப்பாற்றினார்.
 
இரணியன் பிரகலாதனிடம், ”எங்கே இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? காட்டு” என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே, அவர் பரம் பொருள்; தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்றான். ”இந்தத் தூணிலே இருப்பானா?” என்று ஒரு தூணைக் காட்டி இரணியன் கேட்க, ”இருப்பான்” என்று பிரகலாதன் பதில் சொல்ல, இரணியன் ஆவேசமாக தன்னுடைய கதாயுதத்தால் தூணை ஓங்கி அடித்தான், காலால் உதைத்தான். தூண் இரண்டாகப் பிளந்தது. இரணியன் கேட்ட வரத்தை யோசித்து அதற்கேற்றாற் போல மனிதனும் அற்று மிருகமும் அற்று நரசிம்மமாய், இரவும் அற்று பகலும் அற்று சந்தியா காலத்தில், உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, பூமியில் இரணியனின் உடல் படாமல் தன் மடியில் கிடத்தி எந்தவித ஆயுதமும் இன்றி, தன் விரல்களில் உள்ள நகங்களாலேயே அவன் மார்பைப் பிளந்து, அவனுடைய குருதியை ஒரு சொட்டுக்கூடக் கீழே விடாமல் உறிஞ்சி அவனுடைய குடலைத் தனக்கே மாலையாக்கிக் கொண்டு இரணியனை ஆட்கொண்டார்வதம் செய்தார் [[நரசிம்மர்]]<ref>[http://srimadbhagavatam.com/7/8/29/en1 Bhag-P 7.8.29] "Lord Nrisimhadeva placed the demon on His lap, supporting him with His thighs, and in the doorway of the assembly hall the Lord very easily tore the demon to pieces with the nails of His hand."</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரணியகசிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது