திபெத்திய-பர்மிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: nn:Tibetoburmanske språk
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
 
'''திபெத்திய-பர்மிய மொழிகள்''' (''Tibeto-Burman languages'') [[தென்கிழக்கு ஆசியா]]வின் உயர்நிலப் பகுதிகளிலும், [[பர்மா]]வின் (மியான்மர்) தாழ்நிலப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. இதில் 400 இற்கும் மேற்பட்ட சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் சீன உறுப்பினர்கள் அல்லாத மொழிகள் உள்ளன. இக்குழு, அதன் மிகவும் பரவலாகப் பேசப்படும் உறுப்பினர்களான பர்மிய (மில்லியன் 32 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள்) மற்றும் திபெத்திய (8 மில்லியன் மேல்) மொழிகள் கொண்டு பெயரிடப்பட்டது. பிற மொழிகள் மிகச் சிறிய சமுதாயங்களில் பேசப்படுகிறது. பரவலாக [[சீன-திபெத்திய மொழிகள்|சீன-திபெத்திய மொழிக்குடும்பம்]], சீன மற்றும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்ப கிளைகளாக பிரிக்கிறது. சில அறிஞர்கள் திபெத்திய-பர்மன் ஒரு ஒற்றைத்தொகுதி குழு என்பதை மறுக்கின்றனர்.
 
==வரலாறு==
 
18 ம் நூற்றாண்டில், பல்வேறு ஆய்வாளர்கள் திபெத்திய மற்றும் பர்மிய மொழிகளுக்கு இடையே ஒற்றுமைகளை அவதானித்தனர். இவை விரிவான இலக்கிய மரபுகளை கொண்டிருந்தன. அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரையன் ஹக்டன் ஹோட்க்சன் இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியாவின் இலக்கியம் சாரா மொழிகளின் பயனுள்ள தகவல்களை சேகரித்தார், இவற்றில் பலவற்றில் திபெத்திய மற்றும் பர்மிய தொடர்பு இருப்பதை கவனித்தார். மற்றவர்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் தென்மேற்கு சீனாவின் மேட்டுப்பகுதிகளில் நெருங்கிய மொழிகளை அடையாளம் கண்டனர். "திபெத்திய-பர்மிய" என்ற பெயர் முதன்முதலில் ஜேம்ஸ் ரிச்சர்ட்சன் லோகன், மூலம் 1856 ஆம் ஆண்டு இந்தக் குழுவிற்கு பயன்படுத்தப்பட்டது. லோகனின் பார்வையில் இக்குடும்பம் கங்கை மற்றும் லோகித்திக் கிளைகள் ஒன்றுபட்ட மக்சு முல்லரின் டுரேனியன் குடும்பமாகும். இது [[செமிட்டிக் மொழிகள்|செமிட்டிக்]], [[ஆரியர்|ஆரிய]] ([[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ ஐரோப்பிய]]) மற்றும் சீன மொழிகளை தவிர அனைத்து யுரேசிய மொழிகளை கொண்ட ஒரு பெரிய குடும்பம். (பின்னர் எழுத்தாளர்கள் டுரேனியனியனுள் சீன மொழியை உள்ளடக்கலாம்.) இந்திய மொழியியல் ஆய்வு மூன்றாவது தொகுதி [[பிரித்தானிய இந்தியா]]வின் திபெத்திய-பர்மிய மொழிகளிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:சீன-திபெத்திய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திபெத்திய-பர்மிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது