அரசியல் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: el:Πολιτική ελευθερία (missing)
No edit summary
வரிசை 1:
{{Freedom}}
'''அரசியல் விடுதலை''' அல்லது '''அரசியல் தன்னாட்சி''' (''Political freedom'') என்பது மக்கள் தாங்களாக தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக அவர்களின் நலத்துக்காக ஆட்சி செய்யும் உறவில் அமைந்த ஒரு நிலை. அப்படி இல்லாமல் மற்றவர்களின் வல்லாண்மையின் கீழ் உரிமைகள் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாமலும்<ref>Iris Marion Young, "Five Faces of Oppression", ''Justice and the Politics of Difference" (Princeton University press, 1990), 39-65.</ref>, வலுவாக ஒடுக்கப்பட்டு ஒத்துப்போகச் செய்யாமலும்<ref>Michael Sandel, ''Justice: What's the Right Thing to Do?'' (Farrar, Straus and Giroux, 2010).</ref>, தனிமாந்தர்கள் விரும்பியவாறு செயற்படுத்துவதை தடுக்காமலும்<ref>Amartya Sen, ''Development as Freedom'' (Anchor Books, 2000).</ref>, பொருளாதாரம் போன்ற வழிகளில் பல்வேறு அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் இல்லாத<ref>[[கார்ல் மார்க்ஸ்]], "Alienated Labour" in ''Early Writings''.</ref>, நிலையாகக் கருதப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது அரசியல் அறிவியலில் (political science) ஒரு முக்கியமான கருதுகோளாக, கருத்துருவாக கருதப்படுகின்றது. குறிப்பாக மேற்குலக அரசியல் வரலாற்றில் மக்களாட்சி அமைப்புகளில் இது ஒரு முக்கியக் கருத்துருவாகக் கருதபப்டுகின்றதுகருதப்படுகின்றது(எ,கா அன்னா அரெண்ட்டு<ref>Hannah Arendt, "What is Freedom?", ''Between Past and Future: Eight Exercises in Political Thought'', (New York: Penguin, 1993).</ref>.)
 
பெரும்பாலான நேரங்களில் அரசியல் விடுதலை என்பது பல்வேறு புற அழுத்தங்களில் இருந்து விடுபடுதல் என்னும் நோக்கில் (இல்லாமை என்னும்) எதிர்மறையாக<ref>Isaiah Berlin, ''Liberty'' (Oxford 2004).</ref> கூறப்பட்டாலும், மக்கள் தங்களின் தனிமாந்த உரிமைகளையும் கூட்டு, குழு உரிமைகளையும் நிலைபெறச்செய்தல், <ref>சார்ல்ஸ் டெய்லர், "What's Wrong With Negative Liberty?", ''Philosophy and the Human Sciences: Philosophical Papers'' (Cambridge, 1985), 211-29.</ref> என்றும் நேர்நிலையாகப் (positive) புரிந்துகொள்ளலாம். இக்கருத்துருவானது மக்கள் தங்களுக்குள் இருக்கும் தன்னகத் தடைகள், கட்டுப்பாடுகளில் (பேச்சு, செயற்பாடுகளில்) இருந்து விடுபடுதல் என்னும் நோக்கிலும், புறவயமான குமுக எதிர்பார்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடத்தல்<ref>Ralph Waldo Emerson, "[http://www.emersoncentral.com/selfreliance.htm Self-Reliance]"; Nikolas Kompridis, "Struggling Over the Meaning of Recognition: A Matter of Identity, Justice or Freedom?" in ''European Journal of Political Theory'' July 2007 vol. 6 no. 3 277-289.</ref> என்பதில் இருந்தும் விடுபாட்டுடன் சிந்தித்தல் செயல்படுதல் என்னும் நோக்கிலும் விடுதலை என்று உணரப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது குடிசார் உரிமைகள் பெற்றிருப்பதுடன், நடத்தை (பேச்சு செயல்) முதலியவற்றில் முழு உரிமைகளோடும், மாந்த நேய அடிப்படை உரிமைகளோடும் சட்டத்தின் பாதுகாப்போடு வாழ்தல் என்பதைக் குறிக்கும்.
 
==வரலாறு==
பல மேற்குலக அரசியல் அறிஞர்களின் கருத்துப்படி கிரேக்க நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் அரசியல் விடுதலை என்னும் கருத்து உருவானது. (எ.கா [[அன்னா அரெண்ட்டு]] (Hannah Arendt)<ref>Hannah Arendt, "What is Freedom?", ''Between Past and Future: Eight exercises in political thought'' (New York: Penguin, 1993).</ref>). அரெண்ட்டு அவர்களின் கருத்துப்படி அரசியல் விடுதலை என்பது அரசியல் செயற்பாடு ("Action") என்பதில் இருந்து பிரித்தறிய முடியாதது. அரசியல் செயற்பாடுகளை நடத்துவது என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் நிறைவு எய்தியவர்களால் மட்டுமே இயலும் என்றார். அரெண்ட்டின் கருத்துப்படி விடுதலை (விடுபாட்டுநிலை) என்பது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு [[கிறித்தவம்|கிறித்தவக்]] கருதுகோளாகக் கருதப்பட்ட தன்னுரிமை ("free will or freedom of the will") அல்லது தன்னுள் விடுபாட்டுநிலைமை என்பதோடு தொடர்புடையது. இப்படி அரசியல் செயற்பாட்டுக்கு முக்கிய காரணமான விடுபாட்டுநிலைமை (விடுதலை) இருந்தபோதிலும், இது அரசியல் செயற்பாட்டில் ஒரு முக்கியக் கூறாக விளங்கவில்லை.
 
== இக் கருதுகோள் பற்றிய கருத்துகள்==
வரி 12 ⟶ 13:
[[இடதுசாரி]] அரசியல் கருத்துடையோர் ஒரு தனி மாந்தனோ, குழுவோ தன் அலல்து தம் உள் திறமையை முற்றிலுமாக எட்ட முற்படுவது எட்டுவது என்று பொருள் கொள்கின்றனர். இதனைத் தடைகள், கட்டுகள் மீறி விடுபடுவது என்னும் எதிர்மறையாக அணுகும் கருத்தாகக் கொள்ளாமல் நேர்முறையாக தன்/தம் திறனை வாய்ப்புக்கூறுகளை எட்டுதல் தன்னுரிமையைத் தானாகப் பெற்றிருத்தல் என்று கொள்கின்றனர். அரசிய அறிவியலில் இதனை [[நேர்முறை விடுதலை]]க் கொள்கை என்கிறார்கள்.
 
[[பிரீடரிச் அயாக்கு]] (Friedrich Hayek) என்னும் நன்கு அறியப்பட்ட மரபியல் தாராண்மையாளர் இதனை விடுதலை என்பதன் பிறழ்ச்சியான உள்வாங்கள்உள்வாங்கல் என்று மறுத்துரைத்தார்:
 
<blockquote>[T]he use of "liberty" to describe the physical "ability to do what I want", the power to satisfy our wishes, or the extent of the choice of alternatives open to us&nbsp;... has been deliberately fostered as part of the socialist argument&nbsp;... the notion of collective power over circumstances has been substituted for that of individual liberty.<ref>Friedrich August von Hayek, ‘Freedom and Coercion’ in David Miller (ed), Liberty (1991) pp. 80, 85-86}}</ref></blockquote>
வரி 27 ⟶ 28:
அரசியல் விடுதலை என்னும் கருத்தியலில் சுற்றுச்சூழலியல் பற்றிய சில கட்டுப்பாடுகள் இருத்தல் வேன்டும் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கூறுகின்றனர். விடுதலை என்னும் கருத்து "மாசுபடுத்த விடுதலை" அல்லது "காட்டை அழிக்க விடுதலை" என்பதாகக் கொள்ளல் இயலாது; புறத்தே தீய சூழல் உருவாகுவதைத் தடுக்கக் கட்டுப்பாடுகள் கொண்டிருத்தல் வேண்டும் என்கின்றனர். கோல்ஃவு (Golf) மைதானம், எசுவி (SUV) போன்ற பெரிய தானுந்துகள் பயன்படுத்தல் போன்றவை சூழலை அதிகம் மாசுபடுத்துகின்றது என்பதால் பல்வேறு கருத்துமோதல்கள் இருக்கும் என்று கருதுகின்றனர்.
 
சான் தால்பெர்கு-ஆக்டன் (John Dalberg-Acton) கூறியவாறு, ஒரு நாடு உண்மையிலேயே விடுதலை பெற்றுள்ளதா என்று அறிய வேண்டும் எனில் அதில் உள்ள சிறுபான்மையருக்கு எந்த அளவு பாதுகாப்பு உள்ளது என்பதைப் பார்க்கவேன்டும்பார்க்கவேண்டும். <ref>{{cite book |title= The History of Freedom and Other Essays|edition= |last= Acton|first= John D.|year= 1907|publisher= Macmillan|location= London |page= 4}}</ref>
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்_விடுதலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது