வேளாண்காடு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
இம்முயைில் பல்வகைப்பயன்பாட்டிற்குரிய மரங்கள் கலப்பாகவோ இனவாரியாக தனித்தோ நட்டு வளர்க்கப்படுகின்றன. இவை விறகு, தீவனம், மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மீட்பு போன்றவை இவற்றுள் அடங்கும்.
 
 
== செயல்பாட்டு முறையான வகைப்பாடு ==
அனைத்து வேளாண் வகைத் திட்டங்களும் செயல்பாட்டின் ஊடாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை
# உற்பத்திச் செயல்பாடுகள்
# பாதுகாப்பு செயல்பாடுகள்
என்பன.
 
=== உற்பத்திச் செயல்பாடுகள் ===
வேளாண்காடுகளில் உற்பத்தி செய்யப்படும் 1.உணவு ,2.கால்நடைத்தீவனம்,3.எரிபொருள் விறகு 4.ஆடைகள் 5.கட்டுமானப் பொருட்கள் 6.மரகட்டைகள் அல்லாத வனப்பொருட்கள் ஆகிய பொருள்களின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்படுகின்றன.
 
=== பாதுகாப்புச் செயல்பாடுகள் ===
பாதுகாப்புச் செயல்பாடுகளின் அடிப்படையிலான வகைப்பாடுகள் இவ்வகையில் அமையும்.
 
# காற்றுத் தடுப்பு
# தடுப்புப் பட்டைகள்
# மண் மேலாண்மை
# மண் தரம் உயர்த்துதல்
 
 
== சமூக பொருளாதார வனகட்டுபாடு ==
சமூக பொருளாதாரக் கொள்கைளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி அமைவு,தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு வேளாண் காடுகளை பின்வருமாறு மூன்று வகையில் பிரிக்கலாம்.
* வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்
* நடுநிலை வேளாண் காடுகள் திட்டம்
* தன்னிறைவு வேளாண் காடுகள் திட்டம்
 
=== வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்===
இத்திட்டத்தின் உற்பத்திப்பொருட்கள் மட்டுமே எப்போதும் அளவீடாகிறது. எடுத்துக்காட்டாக
தென்னை, ரப்பர் மற்றும் எண்ணெய்ப் பனை முதலானவை தோப்பாக பல ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறது. மற்றும் நிழல் தாங்கி வளரும் காப்பி, தேயிலை மற்றும் கோ கோ போன்றவை மரங்களின் நிழல்களில் பராமரிக்கப்படுகிறது
 
=== நடுநிலை வேளாண் காடுகள் திட்டம் ===
இத்திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் வளர்ப்பில் நோக்கம் தன்னிறைவை மிஞ்சுகிற வேளையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற நோக்கமுடையது.
 
=== தன்னிறைவு வேளாண்காடுகள் திட்டம் ===
இத்தகைய வேளாண் காடுகள் திட்டப் பண்ணை உரிமையாளரின் திருப்திக்காகவும் அவருடைய குடும்பத் தேவைகள் மட்டுமே நிறைவு செய்து கொள்கின்ற கருத்துடையது.
 
== சூழலியல் வகைப்பாடு==
 
மண் வளம், காலநிலை, நில அமைப்பு போன்ற இயற்கைச் சூழலுக்கேற்ற வேளாண்பயன்பாட்டை இவ்வகைக் குறிக்கிறது.
 
* '''மிதமான ஈரப்பதம்/ஈரப்பதமான தாழ்நிலைப்பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்''': வீட்டுத் தோட்டங்கள், புல்வெளிகள் மீது மரங்கள் மற்றும் மேய்ச்சல், மேம்படுத்தப்பட்ட சுழற்சி விவசாயம் மற்றும் பல பயன்பாட்டு மரத்தோப்புகள் அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.
 
* '''மிதமான வறட்சி/வறண்ட பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்''': வெவ்வேறு வடிவிலான மரங்கள் மற்றும் மேய்ச்சல் புல் வளர்ப்பு, காற்றுத் தடுப்பு மற்றும் தடுப்புப் பட்டைகள் (காற்று அரண்கள்) அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.
 
* '''வெப்பமண்டல உயர்நிலப் பகுதிகளில் வேளாண் வனத் திட்டங்கள்''': இப்பகுதிகளில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பல்லாண்டு மரங்கள் வளர்ப்பு போன்றவை மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணரிப்பைத் தடுக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
== வேளாண்காடு வளர்ப்புத் திட்டங்களின் பயன்கள் ==
 
* வேளாண்காடு வளர்ப்பினால் சுற்றுச்சூழலியல் சார்ந்த பயன்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.
* இயற்கைக்காடுகள் அழிவது தடுக்கப்படுகிறது.
* வெகு வலிமையான ஊட்டச்சத்துக்கள் ஆணிவேருடைய மரங்களால் அடி மண்ணிலிருந்து மேல்பரப்பிற்கு கொண்டு வரப்படுகிறது
* சூழியல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு
* மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது மேலும் மண்ணிலிருந்து சத்துக்கள் நீக்கப்படுவது அதிக வேர்ப்பிடிப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது
* தாவர காலநிலை மேம்படுத்தப்படுகிறது,மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுகிறது,மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்கின்றது.
* இலையுதிர்வின் காரணமாக மண்ணின் மட்கும் திறன் மேம்படுகிறது.
* மண்ணமைப்பானது அங்ககப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக மேம்பாடடைகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்காடு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது