செஞ்சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
இச் சதுக்கத்தைச் சுற்றிலும் காணப்படும் [[செங்கல்|செங்கற்]] கட்டிடங்களைக் காரணமாக வைத்தோ, [[பொதுவுடைமையியம்|பொதுவுடைமை]]க் கொள்கைக்கும் செந்நிறத்துக்கும் உள்ள தொடர்பினாலோ இதற்குச் செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்படவில்லை. "கிராஸ்னாயா" (красная) என்னும் உருசியச் சொல்லுக்கு "சிவப்பு", "அழகு" என்னும் இரு பொருள்கள் உள்ளன. இச் சதுக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள [[புனித பசில் பேராலயம்|புனித பசில் பேராலயத்தைக்]] குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிரானஸ்யா" என்னும் பெயர் வழங்கியது. இது பின்னர் அருகில் உள்ள சதுக்கத்தைக் குறிப்பதாயிற்று. இச் சதுக்கம் முன்னர் "எரிந்துபோன இடம்" என்னும் பொருள்படும் "போசார்" என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 17 ஆம் நூற்றாண்டிலேயே இதற்குத் தற்போதைய பெயர் புழங்கத் தொடங்கியது.
 
==வரலாறு==
 
செஞ்சதுக்கத்தின் சிறப்பான வரலாறு, [[வசிலி சுரிக்கோவ்]], [[கான்சுட்டன்டின் யுவோன்]] போன்ற பல [[ஓவியர்]]களினால் வரையப்பட்ட ஓவியங்களில் வெளிப்படுகின்றன. இச் சதுக்கம் மாசுக்கோவின் முக்கிய சந்தைப் பகுதியாகவே உருவாக்கப்பட்டது. பல்வேறு பொது விழாக்கள் இடம்பெறும் இடமாகவும், பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும் இச் சதுக்கம் பயன்பட்டதுடன், சிலவேளைகளில் சார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. படிப்படியாக வளர்ச்சி பெற்ற இச் சதுக்கம் பின்னர் எல்லா அரசாங்கங்களினதும் அரச விழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது.
 
[[பகுப்பு:இரசியா]]
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது