மின்னோட்டமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pnb:ایمیٹر
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Amperòmeter; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''மின்னோட்டமானி''' அல்லது '''ஆம்ப்பியர்மானி''' அலது '''அம்பியர்மானி''' (''ammeter'')என்பது ஒரு மின்சுற்றில் பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது.
 
== நேர்த்திசை மின்னோட்டமானி (D.C. Ammeter) ==
குறைவான மின்தடை கொண்ட மின்தடையாக்கி ஒன்றை இயங்குசுருள் கால்வனாமீட்டருடன் <u>பக்க இணைப்பாக</u> இணைத்தால், அது நேர்த்திசை மின்னோட்டமானி எனப்படும். குறைந்த மின்தடையுடைய மின்தடையாக்கி இணைத்தடம் (shunt) எனப்படும். இணைத்தடத்தின் மின் தடை குறையக் குறைய மின்னோட்டமானியின் மின்னோட்ட-நெடுக்கம் (range) அதிகரிக்கும்.
 
== மாறுதிசை மின்னோட்டமானி (A.C. Ammeter) ==
நேர்த்திசை மின்னோட்டமானியை [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்னோட்டத்தை]] அளவிடப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், மாறுதிசை மின்னோட்டத்தின் திசைமாறும் இயல்பு நேர்த்திசை மின்னோட்டமானியின் குறிமுள்ளை அலைவுறச் செய்து கொண்டே இருக்கும்; எனவே, குறிப்பிட்டு ஒரு அளவீட்டினை அளவிடவே முடியாது. எனவே தான், மாறுதிசை மின்னோட்டமானி தேவைப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கருவிகள் மாறுதிசை மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப் படுகின்றன:
# இயங்கு இரும்பு கருவிகள் (moving-iron instruments) - காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள உலோகத்தண்டுகளுக்கு இடையே ஏற்படும் விலக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கின்றன.
வரிசை 13:
# கேத்தோடு கதிர் அலைவரைவி (cathode ray oscilloscope CRO).
 
=== 500Hz அதிர்வெண்ணிற்கு மேல் ===
500Hz அதிர்வெண்ணிற்கு மேல் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை இயல்பான மாறுதிசை மின்னோட்டமானியின் உதவியால் அளந்திட முடியாது; எனவே, வெப்ப வகைக் கருவிகள் (thermal type instruments) மூலம் கேள் அதிர்வெண் (AF), வானொலி அதிர்வெண் (RF) மின்னோட்டங்களை அளவிடலாம்.
 
== குறிப்புதவி ==
* இயல்பியல் களஞ்சியம் - ப.க. பொன்னுசாமி - பக். 188, 189
 
வரிசை 56:
[[nn:Amperemeter]]
[[pl:Amperomierz]]
[[pms:Amperòmeter]]
[[pnb:ایمیٹر]]
[[pt:Amperímetro]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது