பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பண்டாரம்''' என்று அழைக்கப் பெறுவோர் [[வீர சைவம்|வீரசைவ]] குலத்தைச் சார்ந்தவர்களாவர். ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் [[சாதி]]யினர் பெரும்பாலும் [[கோவில்]]களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். [[இந்து]] சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
 
===வரலாறு===
 
9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை.
 
ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன.
 
வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது.
 
தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் என்ற சாதியினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல இன்று அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது.
 
==பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது