அதிபரவளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:வளைவரை சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[கணிதவியல்|கணிதவியலில்]] '''அதிபரவளைவு''' (''Hyperbola'') என்பது, ஒருவகைக் [[கூம்பு வெட்டு]] ஆகும். இது ஒரு இரட்டை [[கூம்பு|நேர்வட்டக் கூம்பின்]] இரு பாதிகளையும் ஒரு [[தளம் (வடிவவியல்)|தளமும்]] வெட்டும்போது உருவாகிறது. மற்ற இரு முக்கிய கூம்பு வெட்டுகளான [[பரவளையம்]] மற்றும் [[நீள்வட்டம்]] இரண்டும் கிடைக்க ஓர் தளமானது இரட்டைக் கூம்பின் ஒரு பாதியை மட்டும் வெட்டினால் போதுமானது.
 
நிலையான இரண்டு [[புள்ளி]]களிலிருந்து தனது தூரத்தின் வித்தியாசம் மாறாது இருக்கும் வகையில் இயங்கும் புள்ளியொன்றின் [[இயங்குவரை|ஒழுக்கு]] அதிபரவளைவு ஆகும் எனவும் இதற்கு [[வரையறை|வரைவிலக்கணம்]] கூறலாம். மேற்குறித்த நிலையான புள்ளிகள் இரண்டும் அதிபரவளைவின் [[குவியம் (கணிதவியல்)|குவியங்கள்]] எனப்படும். முன்னர் குறிப்பிட்ட நிலையான தூர வித்தியாசம், அதிபரவளைவின் [[மையம்|மையத்துக்கும்]], அதன் [[உச்சி (வடிவவியல்வளைவரை)|உச்சியொன்றுக்கும்]] இடையிலான தூரத்தின் (a) இரண்டு மடங்கு (2a) ஆகும்.
 
தளத்தில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து (குவியம்) உள்ள தூரம் மற்றும் ஒரு நிலையானக் கோட்டிலிருந்து (இயக்குவரை) அமையும் தூரம் இவை இரண்டின் [[விகிதம்]] எப்பொழுதும் [[மாறிலி]]யாகவும் அம்மாறிலியின் மதிப்பு 1 -ஐ விட அதிகமானதாகவும் உள்ளவாறு நகரும் புள்ளியின் [[இயங்குவரை]]யாகவும் அதிபரவளையம் வரையறுக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது