தமிழ் பாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
==பொருளாதார நிலை==
 
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, நாகர்கோயில், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடும் வயல்களுமாக சிறப்போடு பாணர் வாழ்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சொத்துக்களையும் இழந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதாரம் முதலியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் நிலை காணப்படுகிறது.
முன்பு பாணர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காரணத்தால் அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தங்களுக்கு என்று சில கடவுள்களை அமைத்து வழிபடுகின்றனர். ஆடு, கோழி, பலி கொடுப்பதும் உண்டு.
வரிசை 55:
முற்காலத்தில் யாழ் இசைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் விழாக்காலங்களில் தேர் அலங்கார வேலைகள், அலங்காரக் கடைகள், ஆண்டவனுக்குரிய ஆடைகள் தைத்தல், பந்தல் போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 
அரசாங்க மாற்றத்தால் கோயில்கள் மூலம் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. தையல் தொழில், பந்தல் தொழில், கூலித் தொழில் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். மற்ற சமுதாய மக்கள் இறந்தால் அவர்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் 'பாடை' கட்டிக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற தொழிலைச் செய்து கொண்டுள்ளனர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகர்மன்ற, பஞ்சாயத்து உறுப்பினர் என்று யாரும் கிடையாது. இச்சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர்களும் இல்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_பாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது