"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
ஐக்கிய இராச்சியத்தின் போர்ப்படைகளாவன '''பிரிட்டிஷ் போர்ப்படைகள்''' என்றோ '''மேன்மைமிகு இராணியின் போர்ப்படைகள்''' என்றோ அல்லது அதிகாரபூர்வமாக '''மகுடத்தின் போர்ப்படைகள்''' என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் [[தலைமைத் தளபதி]] [[பிரிட்டிஷ் மகுடாதிபதி|மேன்மைமிகு இராணி]] ஆவார். அவை [[ஐக்கிய இராச்சியப் பாதுகாப்பு அமைச்சகம்|பாதுகாப்பு அமைச்சகத்தால்]] நிர்வகிக்கப் படுகின்றன.
 
பிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய இராச்சியத்தையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும்.
 
2004ஆம் ஆண்டில், [[பிரிட்டிஷ் நிலப்படை]] 112,700 வீரர்களையும் (இதில் 7,600 பெண் வீரர்களும் அடக்கம்), [[இராச விமானப்படை]] 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40,900 வீரர்களைக் கொண்ட [[இராசக் கப்பற்படை]] ஐக்கிய இராச்சியத்தின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு [[வேன்கார்ட் வகை நீர்மூழ்கி|டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக்]] கொண்டது. [[இராச கப்பற்படை வீரர்கள்]] நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் [[NATO]] நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும்.
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1165228" இருந்து மீள்விக்கப்பட்டது