ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 151:
 
இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் [[லேக் மாவட்டம்|லேக் மாவட்டத்திலுள்ள]] [[கம்ப்ரயன் மலைகள|கம்ப்ரயன் மலைகளும்]], வடக்கில் [[பெனைன்ஸ்]] மலைப்பிரதேசம் மற்றும் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்திலுள்ள]] [[சுண்ணாம்புக்கல்]] மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் [[பர்பெக் தீவு|பர்பெக் தீவிலுள்ள]] கீழ்
சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான [[காட்ஸ்வோல்ட்ஸ்]], [[லின்கன்ஷையர்]] மற்றும் [[சாக்]] சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் [[சில்டர்ன்ஸ்]] ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்ப்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: [[தேம்ஸ்]], [[செவெர்ன்]], [[ட்ரெண்ட்]], [[ஔஸ்]] மற்றும் [[ஹம்பர்]] ஆகியன. பெருநகரங்களாகியன [[இலண்டன்]], [[பிர்மிங்ஹம்பர்மிங்காம்(ஐக்கிய ராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]], [[லீட்ஸ்]], [[ஷெஃபீல்ட்]], [[லிவர்பூல்]], [[பிரிஸ்டொல்]], [[நாட்டிங்ஹம்]], [[லீசெஸ்டர்]] மற்றும் [[நியூ கேசில்]]. [[டோவர்|டோவருக்கு]] அருகிலுள்ள [[கால்வாய் சுரங்கம்]] (Channel tunnel) ஐக்கிய இராச்சியத்தை பிரான்ஸுடன் இணைக்கிறது.
 
வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள [[ஸ்நோடௌன்]] ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது [[அங்க்லெசி]] தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள [[கார்டிஃப்]] ஆகும். இன்ன பிற மாநகரங்கள் [[ஸ்வேன்சீ]], [[நியூ போர்ட்]] மற்றும் [[ரெக்ஸ்ஹம்]] ஆகியன.
 
ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் [[ஸ்காட்டிஷ் சமவெளி|சமவெளிகளாகவும்]] வடக்கிலும் மேற்கிலும் [[ஸ்காட்டிஷ் மலைப்பகுதி|மலைப்பகுதிகளாகவும்]] உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள [[பென் நெவிஸ்]] சிகரமே ஐக்கிய இராச்சியத்தின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. [[ஹீப்ரைட்ஸ்]], [[ஆர்க்னீ]],
[[ஷெட்லேண்ட் தீவுகள்]] மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத [[ராக்கெல்]] ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் [[எடின்பரோ]], [[க்ளாஸ்கோகிளாஸ்கோ]], [[அபர்தீன், கொட்லாந்து|அபர்தீன்]] மற்றும் [[டண்டீ]] ஆகியவை.
 
அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. [[பெல்ஃபாஸ்ட்]] மற்றும் [[லண்டண்டெர்ரி]] அதன் முக்கிய நகரங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது