"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
ஐக்கிய இராச்சியம் முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, [[தனியார்மயமாக்கல்|தனியார்மயமாக்கல்களை]] மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. [[மக்கள்நல அரசமைப்பு|மக்கள்நல அரசமைப்பையும்]] (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது.
 
[[உழவுத் தொழில்]], ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60% பங்கு, மக்கள்தொகையில் 1% அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் பெரிய அளவில் [[நிலக்கரி]], [[எரிவாயு]] மற்றும் [[எண்ணை]] வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு [[GDPமொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 10% ஆகும். இது UK போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும்.
 
சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, [[வங்கி]]த் துறை, [[காப்புறுதி]]த் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ.இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. [[ஐக்கிய இராச்சிய சுற்றுலாத் துறை|சுற்றுலாத் துறையும்]] இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது.
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1165237" இருந்து மீள்விக்கப்பட்டது