இசுட்ரோன்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: bs:Stroncij
*திருத்தம்*
வரிசை 1:
{{Elementbox_header | number=38 | symbol=Sr | name=இசுட்ரோன்சியம் | left=[[ருபீடியம்]] | right=[[இயிற்றியம்]] | above=[[கால்சியம்|Ca]] | below=[[பேரியம்|Ba]] | color1=#ffdead | color2=black }}
{{Elementbox_series | [[காரக்கனிம மாழைமாழைகள்]]கள் }}
{{Elementbox_groupperiodblock | group=2 | period=5 | block=s }}
{{Elementbox_appearance_img | Sr,38| வெள்ளி போல் வெண்மை }}
வரிசை 60:
{{Elementbox_footer | color1=#ffdead | color2=black }}
 
'''இசுட்ரோன்சியம்''' அல்லது இசுட்ரான்சியம் (ஆங்கிலம்: Strontium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈstrɒntiəm/}}) ஒரு வேதியியல் [[தனிமம்]]. இதன் [[அணுவெண்]] '''38'''; இதன் [[அணுக்கரு]]வில் 50 [[நொதுமி]]கள் உள்ளன. இதன் வேதியியல் குறியீடு '''Sr'''. இது ஒரு [[காரக்கனிம மாழைமாழைகள்]] வகையைச் சேர்ந்த [[வெள்ளி]] போல வெண்மை அல்லது மென் மஞ்சள் நிறத் தோற்றம் தரும் ஒரு தனிமம். இது இயற்கையில் [[செலஸ்டைன்]] மற்றும் [[இசுட்ரோன்சியனைட்]] என்னும் [[கனிமம்|கனிமங்களில்]] இருந்து கிடைக்கின்றது. காற்றில் படுமாறு வெளியிடப்பட்டால் இதன் தோற்றம் மஞ்சள் நிறமாக மாறுகின்றது. இத் தனிமம் வேதியியல் வினை விறுவிறுப்பு கொண்டது. இது [[கால்சியம்|கால்சியத்தை]]விட மென்மையான (மெதுமையான) பொருள், [[நீர்|நீருடன்]] வேதியியல் வினைப்படுவதில் கால்சியத்தைவிடவும் கூடிய விறுவிறுப்புடையது (இவ்வினையில் [[இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு]]ம் [[ஐதரசன்|ஐதரசனும்]] உருவாகின்றது). காற்றில் எரியும் பொழுது இது [[இசுட்ரோன்சியம் ஆக்சைடு]]ம், [[இசுட்ரோன்சியம் நைட்ரைடும்]] விளைவிக்கின்றது, ஆனால் இசுட்ரோன்சியம் நைட்ரைடு 380 °C க்குக் கீழே [[நைட்ரஜன்|நைட்ரஜனுடன்]] வினைப்படுவதில்லையாதலால், [[அறைவெப்பநிலை]]யில் ஆக்ஸைடு மட்டுமே உருவாகின்றது. ஆக்ஸைடாகாமல் இருக்க [[மண்ணெணெய்]] (கெரோசின்)க்கு அடியில் முழுகி வைத்திருப்பது வழக்கம். நுண் பொடியாக உள்ள இசுட்ரோன்சியம் காற்றில் தன்னியல்பாக தீப்பற்றும். அது எரியும் பொழுது குருதிச் சிவப்பான நிறத்தில் எரியும். இதன் உப்புகளை [[வானவேடிக்கை]] காட்சிகளில் பயன்படும் மத்தாப்பு போன்ற அழகு தீப்பொறிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்துவர்.
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
"https://ta.wikipedia.org/wiki/இசுட்ரோன்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது