இந்திய விண்வெளி ஆய்வு மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

277 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen claenup
சி (bot adding hidden cat AFTv5Test & gen claenup)
==துவக்க காலம்==
[[படிமம்:Vikram Sarabhai.jpg|thumb|500pxl|[[விக்கிரம் சாராபாய்|முனைவர் விக்ரம் சாராபாய்]] இந்திய விண்வெளி ஆய்வுவின் தந்தை]]
இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் [[சிசிர் குமார் மித்திரா]]வின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள் மூலம் [[அயனி வெளி]]யை ஆய்வு செய்ய சோதனைகளை நிகழ்த்தினார்.<ref name=daniel486>Daniel, 486</ref> பின்னர், இந்திய அறிவியலாளர்கள் [[சி. வி. ராமன்]] , [[மேக்நாத் சாகா]] போன்றோர் விண்வெளி அறிவியலுக்கு பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர்.<ref name=daniel486/> இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=daniel486/> இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: [[விக்கிரம் சாராபாய்]]— [[அகமதாபாத்]]தில் அமைந்துள்ள [[இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்|இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை]] நிறுவியவர்—மற்றும் [[ஓமி பாபா|ஹோமி ஜெஹாங்கீர் பாபா]], 1945இல் [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை]] நிறுவன இயக்குனராக துவக்கியவர்.<ref name=daniel486/> விண்வெளித் துறையில் துவக்கத்தில் [[அண்டக் கதிர்|அண்டக் கதிரியக்கம்]], உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், [[கோலார்]] சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் [[புவியின் வளிமண்டலம்|உயர் வளிமண்டலம்]] போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.<ref name=daniel487>Daniel, 487</ref> ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. <ref name=daniel487/><ref name=daniel488>Daniel, 488</ref>
 
1950இல் [[இந்திய அரசு|இந்திய அரசில்]] புதியதாக உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே இத்துறையில் ஆய்வுக்கு அரசு ஆதரவு கிட்டியது.<ref name=daniel488/> அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது.<ref name=daniel489>Daniel, 489</ref> 1823இல் [[கொலாபா]]வில் துவங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப் புலம் குறித்து ஆயப்பட்டு வந்தது. [[வானிலையியல்|வானிலையியலில்]] நடத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்புமிக்க தகவல்கள் திரட்டப்பட்டன. 1954ஆம் ஆண்டில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநில வானாய்வு மையம் நிறுவப்பட்டது.<ref name=daniel488/> 1957ஆம் ஆண்டில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தில்]] [[ஓஸ்மானியா பல்கலைக்கழகம்|ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில்]] ரங்க்பூர் வானாய்வு மையம் நிறுவப்பட்டது.<ref name=daniel488/> இந்த இரு மையங்களும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின.<ref name=daniel488/> விண்வெளித்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் [[இந்தியப் பிரதமர்]] [[சவகர்லால் நேரு]]வின் பங்கும் இருந்தது<ref name=daniel489/> 1957இல் [[சோவியத் ஒன்றியம்]] வெற்றிகரமாக [[இசுப்புட்னிக் 1]]ஐ விண்ணில் செலுத்தியதும் மற்ற நாட்டவரும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக அமைந்தது.<ref name=daniel489/> 1962ஆம் ஆண்டில் விக்கிரம் சாராபாய் தலைமையில் [[இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு]] (INCOSPAR) அமைக்கப்பட்டது. <ref name=daniel489/> 1969ஆம் ஆண்டில் இக்குழுவிற்கு மாற்றாக இஃச்ரோ நிறுவப்பட்டது.
 
==ஏவுகலத் தொகுதி ==
[[Image:Indian carrier rockets.svg||thumb|200pxl|ஒப்பீடு: [[எஸ்.எல்.வி]], [[ஏ. எஸ். எல். வி]], [[முனைய துணைக்கோள் ஏவுகலம்|பீ.எஸ்.எல்.வி]], [[ஜி. எஸ். எல். வி]], [[ஜி. எஸ். எல். வி]]]]
 
புவிசார் அரசியல் மற்றும் பொருளியல் காரணங்களுக்காக 1960களிலும் 1970களிலும் தனது சொந்தமான ஏவுகலங்களைத் தயாரிக்க இந்தியா உந்தப்பட்டது. 1960-70 காலகட்டங்களில் முதல்நிலையாக ஆய்வு விறிசுகளை வெற்றிகரமாக இயக்கியபிறகு 1980களில் துணைக்கோள் ஏவுகலங்களை வடிவமைத்து கட்டமைக்கும் திட்டங்கள் உருவாகின. இவற்றிற்கான முழுமையான இயக்கத்திற்கான ஆதரவு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. <ref name=Gupta1697>Gupta, 1697</ref> [[எஸ். எல். வி|எஸ்.எல்.வி-3]],[[ஏ. எஸ். எல். வி|மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலங்களை]] அடுத்து [[முனைய துணைக்கோள் ஏவுகலம்]] (PSLV) மற்றும் [[ஜி. எஸ். எல். வி|புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம்]] (GSLV) தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 
===செயற்கைக்கோள் ஏவுகலம் (SLV)===
{{Main|எஸ். எல். வி }}
::''நிலை: <font style="color:gray;">நிறுத்தப்பட்டது</font color="Grey">''
இதன் ஆங்கிலச் சுருக்கமான எஸ்.எல்.வி அல்லது எஸ்.எல்.வி-3 என அறியப்படும் செயற்கைக்கோள் ஏவுகலம் ஓர் நான்கு கட்ட திட எரிபொருள் இலகு ஏவுகலம். 500கிமீ தொலைவு ஏறவும் 40 கிலோ ஏற்புச்சுமை கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.tbs-satellite.com/tse/online/lanc_isro.html| title=ISRO vehicles| publisher=Jean-Jacques Serra for TBS Satellite| accessdate = 2009-01-27}}</ref> முதல் ஏவல் 1979இலும் அடுத்த ஆண்டு இருமுறையும் இறுதி ஏவல் 1983இலும் நிகழ்ந்தன. இந்த நான்கில் இரண்டே வெற்றிகரமாக அமைந்தன.<ref name=ISROms>{{cite web|url=http://www.isro.org/mileston.htm| title=ISRO milestones| publisher=ISRO| accessdate = 2009-01-27 |archiveurl = http://web.archive.org/web/20071014010815/http://www.isro.org/mileston.htm |archivedate = 14 October 2007}}</ref>
 
===மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுகலம் (ASLV)===
{{Main|ஏ. எஸ். எல். வி}}
::''நிலை: <font style="color:gray;">நிறுத்தப்பட்டது</font color="Grey">''
இந்த ஏவுகலம் ஐந்து நிலை திட எரிபொருள் விறிசு ஆகும்; இதனால் 150 கிலோ செயற்கைக்கோளை [[தாழ் புவி சுற்றுப்பாதை]]யில் ஏவ இயலும். இதன் வடிவமைப்பு எஸ்.எல்.வியை அடியொற்றி இருந்தது. <ref>{{cite web|url=http://www.isro.org/aslv.htm| title=ASLV| publisher=ISRO| accessdate = 2009-01-27 |archiveurl = http://web.archive.org/web/20071017032729/http://www.isro.org/aslv.htm |archivedate = 17 October 2007}}</ref> முதல் ஏவல் 1987இலும், 1988,1992,1994 களில் மூன்று ஏவல்களும் நிகழ்ந்தன; இரண்டு ஏவல்களே வெற்றி பெற்றன.<ref name="ISROms"/>
 
===முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV)===
{{Main|முனைய துணைக்கோள் ஏவுகலம்}}
::''நிலை: <font style="color:Green;">இயக்கத்தில்</font color="Green">''
பி. எஸ்.எல்.வி என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் பரவலாக அறியப்படும் முனைய துணைக்கோள் ஏவுகலம் இந்திய தொலையுணர்வு துணைக்கோள்களை [[சூரிய இணைவு சுற்றுப்பாதை]]களில் ஏவிட வடிவமைக்கப்பட்ட மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். இதற்கு முன்னர் இந்த செயற்கைக்கோள்கள் உருசியாவிலிருந்து விண்ணேற்றப்பட்டு வந்தன. இந்த ஏவுகலங்களால் சிறு துணைக்கோள்களை புவிநிலை மாற்று சுற்றுப்பாதைக்கு ஏவ முடியும். இந்த ஏவுகலத்தால் 30 விண்கலங்கள் (14 இந்திய விண்கலங்களும் 16 வெளிநாட்டு விண்கலங்களும்) விண்ணேற்றப் பட்டுள்ளன.<ref name="Chandrayaan_1_Launch">[http://isro.org/pressrelease/Oct22_2008.htm PSLV-C11 Successfully Launches Chandrayaan-1]</ref> ஏப்ரல் 2008இல் இது ஒரே ஏவலில் 10 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றி அதுவரை இருந்த உருசிய சாதனையை முறியடித்தது. <ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7681701.stm| title= India sets its sights on the Moon| publisher=BBC| accessdate = 2008-10-23| date = 2008-10-21| first=Sanjoy| last=Majumder}}</ref>
 
சூலை 15, 2011 அன்று ப.எஸ்.எல்.வி தனது 18வது தொடர்ந்த ஏவல்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதன் 19 ஏவல்களில் செப்டம்பர் 1993 முதல் பயணம் மட்டுமே தோல்வியில் முடிந்தது. <ref>[http://www.antaranews.com/en/news/70453/india-successfully-puts-3-satellites-into-orbit Antara News : India successfully puts 3 satellites into orbit<!-- Bot generated title -->]</ref>
 
===புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV)===
ஜி.எஸ்.எல்.வி ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு கலம். இது ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு). இந்தத் திட்டம் [[இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி|இன்சாட்]] வகை செயற்கைக்கோள்களை புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திடவும் வெளிநாட்டு விறிசுகளை நாடவேண்டிய தேவையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டது.இதனால் 5 டன் எடையுள்ள ஏற்புச்சுமையை தாழ் புவி சுற்றுப்பாதையில் இட முடியும்.
 
இத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாக திசம்பர் 25, 2010இல் ஜிசாட்-5பி சுமந்தவண்ணம் சென்ற ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டு அமைப்பு தவறியதால் முன்னரே திட்டமிட்டபடி பாதுகாப்பாக தானே வெடித்துச் சிதறியது. <ref name=dec25failure>{{cite news|title=Indian space program hit by another launch mishap|url=http://www.spaceflightnow.com/news/n1012/25gslv/|newspaper=SpaceFlightNow|date=25 December 2010}}</ref>
 
===புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III (GSLV III)===
இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் (IRS) இசுரோவினால் வடிவமைக்கட்டு, கட்டப்பட்டு, ஏவப்பட்டு, இயக்கப்படும் [[புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்]] தொடராகும். இவற்றால் நாட்டிற்கு தொலை உணர்வு சேவைகள் கிட்டுகின்றன. உலகிலேயே குடிசார் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் மிகப்பெரிய தொலையுணர்வு துணைக்கோள்த் தொகுதியாக விளங்குகிறது. துவக்கத்தில் இவை 1 (A,B,C,D) என பெயரிடப்பட்டிருந்தாலும் அண்மைக் காலத்தில் இவற்றின் பயன்பாடுகளை ஒட்டி (ஓசியன்சாட், கார்ட்டோசாட், ரிசோர்சுசாட்) பெயரிடப்படுகின்றன.
===கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்கள்===
இசுரோ தற்போது இரண்டு ''ஒற்றுக் கோள்கள்'' என விளையாட்டாக அழைக்கப்படும் கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்களை இயக்குகிறது. ஏப்ரல் 26, 2012 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலமாக ரிசாட்-1 (RISAT-1) விண்ணேற்றப்பட்டது. இது சி-அலைக்கற்றையில் இயங்கும் சின்தெடிக் அபெர்சர் ரேடார் ஏற்புச்சுமையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான மிகு இடப் பிரிதிறன் கொண்ட படிமங்களைப் பெற இயலும்.<ref name="ndtv">{{cite news|url=http://www.ndtv.com/article/india/isro-successfully-launches-spy-satellite-risat-1-202464?pfrom=home-otherstorieso|title='ISRO successfully launches 'spy satellite' RISAT-1'|date=2012-04-26|publisher=ndtv|}}</ref>.இதற்கு முன்னரே 2009இல் [[இசுரேல்|இசுரேலிடமிருந்து]] $110 மில்லியன் செலவில் பெறப்பட்டு ஏவப்பட்ட ரிசாட்-2 வையும் இயக்குகிறது.<ref>{{cite news|urlname=http://www."ndtv.com"/article/india/isro-successfully-launches-spy-satellite-risat-1-202464?pfrom=home-otherstorieso|title='ISRO successfully launches 'spy satellite' RISAT-1'|date=2012-04-26|publisher=ndtv|</ref>
 
===மற்ற செயற்கைக்கோள்கள்===
| [[சதீஸ் தவான் விண்வெளி மையம்]] || [[ஸ்ரீஹரிக்கோட்டா]] || பல துணை மையங்களைக்கொண்டு இந்தியாவின் செயற்கைக்கோள்களை ஏவுமிடமாக ஸ்ரீஹரிக்கோட்டா தீவு விளங்குகிறது.<ref name=Ojha_142/> இது ஆய்வு விறிசுகளை ஏவும் முதன்மைத் தளமாகவும் உள்ளது.<ref name=Suri&Rajaram414/> மேலும் இங்குதான் இந்தியாவின் மிகப்பெரும் திண்ம உந்துகை விண்வெளி ஊக்கித் தொகுதியும் (SPROB) நிலைமின் சோதனை மற்றும் மதிப்பீட்டு வளாகமும் (STEX) அமைந்துள்ளன.<ref name=Suri&Rajaram414/>
|-
| [[விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]] || [[திருவனந்தபுரம்]] || இஃச்ரோவின் மிகப்பெரும் வளாகமாக விளங்கும் இந்த மையம் முதன்மை தொழில்நுட்ப மையமாகவும் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் ஏவுகலம் - 3]] [[ஏ. எஸ். எல். வி|மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலம்]], மற்றும் [[முனைய துணைக்கோள் ஏவுகலம்]] தொடர் ஏவுகலங்களை வடிவமைத்த மையமாகவும் உள்ளது.<ref name=Ojha_142/> இந்த வளாகத்தில் [[தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம்|தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையமும்]] ரோகினி ஆய்வு விறிசுத் திட்ட அலுவலகமும் உள்ளன.<ref name=Ojha_142/> இங்கு [[ஜி. எஸ். எல். வி]] தொடர் ஏவு கலங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.<ref name=Ojha_142>India in Space", ''Science & Technology'' edited by N.N. Ojha, 142.</ref>
|-
| [[தும்பா நிலநடுக்கோட்டு விறிசு ஏற்றுகை நிலையம்]] ||[[திருவனந்தபுரம்]]|| இந்த நிலையம் ஆய்வு விறிசுகளை ஏவிவிட பயன்படுத்தப்படுகிறது.
|}
 
| [[இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம், திருவனந்தபுரம்|இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST)]] || [[திருவனந்தபுரம்]] || இந்தக் கல்வி நிலையத்தில் விண்வெளிப் பொறியியல், வான்பயண இலத்திரனியல் மற்றும் இயற்பியல் கல்வித்திட்டங்களில் பட்ட மற்றும் பட்டமேற்படிப்புக்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையத்தின் முதல் தொகுதி மாணவர்கள் சூலை 2011இல் இஃச்ரோவின் பல்வேறு மையங்களில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
|-
| மேம்படுத்தல் மற்றும் கல்விக்கான தொடர்பியல் பிரிவு || [[அகமதாபாத்]] || இந்த மையம் பெரும்பாலும் [[இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி|இன்சாட்]] திட்டத்துடன் ஒருங்கிணைந்து கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பயிற்சிகளுக்குப் பணி புரிகிறது.<ref name=Ojha_142/> இதன் முதன்மை பணிகளாக சிற்றூர்களுக்கான ''கிராம்சாட்'' மற்றும் கல்விக்கான ''எடுசாட்'' திட்டங்களை செயற்படுத்துவதாகும்.<ref name=Suri&Rajaram414/> இதன் கீழேயே பயிற்சி மற்றும் வளர்ச்சிக்கான தொடர்பு அலைவரிசை (TDCC) இயங்குகிறது.<ref name="Suri&Rajaram415>"Space Research", ''Science and Technology in India'' edited by R.K. Suri and Kalapana Rajaram, 415.</ref>
|}
 
 
== தற்போதைய திட்டங்களும் சாதனைகளும் ==
இந்திய விண்வெளி ஆய்வு மையமானது, விண்வெளிக்கு செல்லும் கருவிகள், [[விண்வெளிப் பறப்பு]], போன்றவை மட்டுமில்லாமல் மேலும் சில திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது, [http://bhuvan.nrsc.gov.in/bhuvan_links.html புவன் திட்டமாகும்] [[கூகிள் எர்த்]] திட்டத்திற்கு போட்டியாகவும், அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக [[முப்பரிமாணம் | முப்பரிமாண]] படங்களையும் மிகத்துல்லியமாகப் காணலாம்.
 
இத்திட்டத்தின் வாயிலாக, இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாக பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் சாலையில் உள்ள ஒரு வாகனத்தைக் கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும். ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாக பார்க்க முடியாது.
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Space program of India|இந்திய விண்வெளித் திட்டம்}}
 
* [http://www.isro.org/ இஃச்ரோ முகப்பு பக்கம்]
* [http://www.narl.gov.in/ NARL Home Page]
 
[[பகுப்பு:இந்திய விண்வெளித் திட்டங்கள்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:منظمة بحوث فضائية هندية]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174349" இருந்து மீள்விக்கப்பட்டது