"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: kk:Ұдыбритания)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
'''ஐக்கிய இராச்சியம்''' (''United Kingdom'', பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), [[மேற்கு]] [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். அது [[பொதுநலவாய நாடுகள்]], [[ஜி8]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] மற்றும் [[நேட்டோ]] ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ''ஐக்கிய இராச்சியம்'' என்றோ ''UK'' அல்லது ''பிரித்தானியா'' (Britain) என்றோ (தவறுதலாக) '''பெரிய பிரித்தானியா''' என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான [[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]] மற்றும் [[ஸ்காட்லாந்து]] ஆகியவை — [[பெரிய பிரித்தானியா|பெரிய பிரித்தானியத்]] தீவில் உள்ளன. நான்காவது பாகமான, [[அயர்லாந்து]] தீவிலுள்ள [[வடக்கு அயர்லாந்து]], ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் [[அயர்லாந்துக் குடியரசு]]க்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல [[பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்|கடல் கடந்த நிலப்பரப்புகளையும்]] கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.
 
பல [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களின்]] வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, [[இலண்டன்]] மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. [[1922]]இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் [[1949]] வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.
 
ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, [[வடக்குக் கடல்]], [[ஆங்கிலக் கால்வாய்]], [[செல்டிக் கடல்]], [[ஐரியக் கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், [[வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறை]]யைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.
தற்போதைய முடிக்குரியவர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசெபெத் |இராணி எலிசெபெத் II]] (Queen Elizebeth II) ஆவார். இவர் [[1952]]ஆம் ஆண்டு அரியணை ஏற்று, [[1953]]ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் [[வால்டர் பேக்ஹாட்]] (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன—உதாரணம், "[[தொங்கு பாராளுமன்றம்]]" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்றத்தைத்]] துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்த சிறப்புரையை வழங்குவார்.
 
இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு [[பாராளுமன்ற சட்டவரைவு]] மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை [[பெரிய பிரித்தானியாவின் ஆன்|இராணி ஆன்]] (Queen Anne) [[1708]]ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிப்பதாகும்.
[[பகுப்பு:ஐரோப்பிய நாடுகள்]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|yi}}
 
[[ab:Британиа Ду]]
[[af:Verenigde Koninkryk]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174418" இருந்து மீள்விக்கப்பட்டது