ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 7:
[[படிமம்:PuliNahaththaali-1.jpg|thumb|250px|பஞ்சாயுதம் பொறிக்கப்பட்ட புலிநகத்தாலி (நிமால் டி சில்வாவைப் பின்பற்றி வரையப்பட்டது)]]
இன்று அணிகலன்கள் பெரும்பாலும் அழகுக்காகவே அணியப்படுகின்றன. இதனால், பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்திக் கலை அம்சங்களுடன் இன்றைய அணிகலன்கள் செய்யப்படுகின்றன. ஆனால், [[பேய்]], [[பிசாசு]], இயற்கைச் சக்திகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காகவே அணிகலன்கள் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு. நாகரிக வளர்ச்சியினால், அணிகலன்கள் அழகுப் பொருள்களாகவும் பயன்படத் தொடங்கின. எனினும், காப்புக்காக அணிகலன்களை அணியும் வழக்கமும் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. இன்றும் பல பண்பாடுகளில் வழக்கில் உள்ளது. ஐம்படைத் தாலி என்பதும் காவலுக்காக அணியப்பட்ட அணிகலன்களில் ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில், காப்புக்காக அணியப்படும் தாலிகள் தொடர்பான குறிப்புக்கள் புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலேயே காணப்பட்டாலும், ஐம்படைத் தாலி என்னும் பெயர் மணிமேகலையிலேயே முதன் முதலில் வருகின்றது.
 
 
ஐம்படைத் தாலி என்பது காவலாக ஆண் குழந்தைகளின் கழுத்தில் அணியும் ஒருவகை அணி என்றும், திருமாலின் கையிலுள்ள ஆயுதங்களின் வடிவில் அமைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர். காவலாக அணியப்படும் அணி என்பதும், ஆண் குழந்தைகள் அணிவது என்பதும் பழந் தமிழ் இலக்கியங்களில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், திருமாலின் ஆயுதங்களுடனான தொடர்பு குறித்து எவ்வித சான்றுகளும் பழைய தமிழ் இலக்கியங்களில் இல்லை. ஆண் குழந்தைகள் அணியும் காப்பணியைக் குறிப்பிடும்போது சங்க நூல்களாகிய அகநானூறும், புறநானூறும் வெறுமனே "தாலி" என்றே குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது. ஐம்படைத் தாலி என்னும் பெயர் இலக்கியங்களில் வருவதற்கு முன்பே ஆயுதங்களின் போல்மங்களை சேர்த்துச் செய்யப்பட்ட அணிகள் பற்றிய குறிப்புக்கள் கலித்தொகை என்னும் நூலில் வருகின்றன<ref>கலித்தொகை, பாடல்கள் 85, 86</ref>. "படை" என்ற சொல்லையோ, "தாலி" என்ற சொல்லையோ பயன்படுத்தாமல் "அணி" என்ற சொல்லாலேயே இவற்றை இப்பாடல்கள் குறிக்கின்றன. கலித்தொகை குறிக்கும் மேற்படி அணிகள் தொடர்பான இன்னொரு வேறுபாடு இங்கே காணப்படும் ஆயுதங்கள் வாள், மழு என்னும் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே. அத்துடன், இவற்றோடு காளைச் சின்னமும் சேர்ந்திருப்பது இவ்வணி சைவச் சார்பு கொண்டதாக இருக்கலாம் என்னும் கருத்துக்கும் வித்திடுகின்றன.
 
 
காப்பணியாகக் குழந்தைகள் அணியும் அணியாகக் [[புலிப்பல் தாலி]] பற்றிய குறிப்புக்கள் அகநானூறு, [[குறுந்தொகை]], [[சிலப்பதிகாரம்]] போன்ற முற்பட்ட நூல்களில் காணப்படுவது, புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது என்ற கருத்துக் கொள்வதற்கு இடமளிக்கிறது. இதனால், புலிப்பல் தாலி அணியும் வழக்கத்தின் பிற்கால வளர்ச்சி நிலையிலேயே சமயச் சார்பு கொண்ட ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்<ref>காந்தி, க., 2008. பக்: 200</ref>.
வரி 29 ⟶ 27:
* புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), ''அகநானூறு - களிற்றியானை நிரை'', பாரி நிலையம், சென்னை. 2002 (முதற் பதிப்பு 1960)
* புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), ''புறநானூறு'', பாரி நிலையம், சென்னை. 2004 (முதற் பதிப்பு 1958)
* சிறீ சந்திரன், ஜெ., ''மணிமேகலை மூலமும் தெளிவுரையும்", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2002.
* De Silva, Nimal., Pathirana, Hiranthi., Traditions of Hindu Jewellary, "The Sri Lanka Arcitect -Sept 2002 - Feb 2003", Sri Lanka Institute of Architects, Colombo. 2003.
 
 
[[பகுப்பு:தமிழர் அணிகலன்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது