"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: gag:Kamboca)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
 
கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் [[தாய்லாந்து]] நாடும், வடகிழக்கில் [[லாவோஸ்]] நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் [[வியட்நாம்]] நாடும், தெற்கில் [[தாய்லாந்து வளைகுடா]]வும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் [[மீக்கோங்]] ஆறும், [[தொன்லே சாப்]] ஏரியும் ஆகும்.
கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 [[மில்லியன்]] வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் [[அங்கூர் வாட்]] கோவில் பகுதிக்கு வருகை தந்தனர். <ref>[http://business.inquirer.net/money/breakingnews/view/20080530-139652/San-Miguel-eyes-projects-in-Laos-cambodia-Myanmar San Miguel eyes projects in Laos, கம்போடியா, Myanmar<!-- Bot generated title -->]</ref> கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே [[கல்நெய்]]யும், இயற்கை [[எரிவளி]]யும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்<ref>[http://www.reuters.com/article/companyNewsAndPR/idUSBKK30404620070119 Cambodia hopes to start oil production in 2009]</ref>.
 
== வரலாறு ==
=== கிமர் பேரரசு ===
[[படிமம்:Bayon Angkor Relief1.jpg|left|thumbnail| [[கிமர் பேரரசு|கிமர்]] படை போருக்கு செல்லும் காட்சி]]
[[படிமம்: Boats on Tonlé Sap river.jpg |தொன்லே சாப் ஏரி |thumbnail|right]]
{{main|கெமர் பேரரசு}}
முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் [[கிமு]] [[கிமு 1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. [[கிபி]] [[3ம் நூற்றாண்டு|மூன்றாம் நூற்றாண்டு]] முதல் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டு]] வரை, இந்திய அரசுகளான [[புன்னன்]], [[சென்லா]] அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் [[கிமர் பேரரசு|கிமர் பேரரசை]] நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து. <ref name="CS">Country-Studies.com. [http://www.country-studies.com/cambodia/early-indianized-kingdom-of-funan.html ''Country Studies Handbook'';] information taken from US Dept of the Army. Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகள் [[சீனா]]வுடனும், [[தாய்லாந்து]]டனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர். <ref name="BRIT">Britannica.com. [http://www.britannica.com/eb/article-52477 History of Cambodia.] Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய [[கிமர் பேரரசு]] , [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] முதல் [[15ம் நூற்றாண்டு]] வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.
 
கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான [[அங்கூர்]] நகரம் உருவானது. அங்கூர் நகரின், [[அங்கூர் வாட்]] கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
கிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், [[அங்கூர்]] நகரம் [[தாய் இன மக்கள்|தாய் இன]] மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி [[1432]]ல் கைவிடப்பட்டது. <ref name="Chan">[[David P. Chandler|Chandler, David P.]] "The Land and the People of Cambodia". 1991. HarperCollins. New York, NY. p 77</ref>. [[அங்கூர்]] நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை [[லோவக்]] நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.
 
=== பிரான்சு ஆதிக்கம் ===
கம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த [[மன்னர் நோரோடாம்]], [[1863]]ம் ஆண்டு [[பிரான்சு]] உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது. <ref name="CHANDLER">{{cite book | last = Chandler | first = D.P. | author-link = David P. Chandler | title = A history of Cambodia (2nd ed.) | publisher = Westview Press | date = 1993 | location = Boulder, CO }}</ref>. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், [[சியாம்|சயாமியரின்]] ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் [[1954]] வரை இருந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது, [[1941]] முதல் [[1945]] வரை [[சப்பான்|சப்பானிய பேரரசினால்]] கையகப்படுத்தப்பட்டு, பின், [[1954]]ம் ஆண்டு [[நவம்பர் 9]] இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா [[அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி]] முறையில் ஆளப்படுகிறது.
 
=== கிமர் செம்படை ===
[[1955]]ம் ஆண்டு இளவரசர் [[சிகானோவ்]], தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், [[1960]] ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். [[வியட்நாம் போர்]] நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை [[நடுநிலை நாடு]] என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி [[பொது உடைமை]] நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது [[கிமர் செம்படை]] (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), [[ஐக்கிய அமெரிக்கா]] ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது. <ref name="SIHNK">{{cite book | last = Sihanouk | first = Norodom | authorlink = Norodom Sihanouk | title = My War with the CIA, The Memoirs of Prince Norodom Sihanouk as related to Wilfred Burchett | publisher = Pantheon Books | date = 1973}}</ref>. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.
 
=== மெனு படை நடவடிக்கை ===
|location = United States}}</ref>.
 
இச்சண்டைகளின் விளைவாக ஏறக்குறைய 2 மில்லியன் கம்போடியர் [[புனோம் பென்]] நகரத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட கம்போடியர் எண்ணிக்கை, ஆதாரங்களைப் பொருத்து மாறுபடுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படையின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 16,000 லிருந்து 25,500 கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கணிக்கின்றனர். .<ref>Ibid., p. 298.</ref> ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் இக்குண்டு வீச்சுகள் அப்பாவி மக்களை கொன்றதோடு, குடிமக்கள் கிமர் செம்படையில் சேர்ந்து போரிடவும் அவர்களை தூண்டியதாக குறிப்பிடுகிறார்கள். <ref>''Pacific Affairs'', vol. 56, no. 2, Summer 1983, p. 295.</ref>. கம்போடிய வரலாறு ஆய்வாளர் கிரெக் குறிப்பிகையில் எளிதாக தோற்கடிக்கபடக் கூடிய கிமர் செம்படை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் தாக்குதலால், மக்களிடம் ஆதரவு பெற்று தோற்கடிக்கவே படமுடியாத படையாக உருவெடுத்தது<ref>Etcheson, Craig, ''The Rise and Demise of Democratic Kampuchea'', Westview Press, 1984, p. 97</ref>.
 
=== 1975 பஞ்சமும், கொலைக்களங்களும் ===
 
போர் முடிவுற்ற நிலையில் [[1975]] இல், கம்போடியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லல் உற்றனர். இந் நிலையில் [[போல் போட்]] தலைவராக இருந்த [[கிமர் செம்படை]], [[புனோம் பென்]] நகரை முழுகட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து, ஆட்சியைக் கைபற்றி நாட்டின் பெயரை [[கம்பூச்சிய குடியரசு]] என மாற்றியமைத்தது. நகர மக்கள் கட்டாயத்தின் பெயரில் உழவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் மக்கள் மாண்டனர்.
[[படிமம்: Khymer Rouge victims IMG 1438p.jpg |கொலைக்களங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்|thumbnail]]
 
இக்கொடுங்கோலாட்சியின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 மில்லியனிலிருந்து 3 மில்லியன் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது<ref>Shawcross, William, ''The Quality of Mercy: Cambodia, Holocaust and Modern Conscience'', Touchstone, 1985, pp. 115-116.</ref><ref>Vickery, Michael, Correspondence, ''Bulletin of Concerned Asian Scholars'', vol. 20, no. 1, January-March 1988, p. 73.</ref>.
கடந்த [[2007]]ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கிய ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசையில் கம்போடியா 162வது இடத்தில் இருப்பதின் மூலம் ஊழல் மலிந்திருப்பதை அறியலாம்<ref>[ http://www.transparency.org/policy_research/surveys_indices/cpi/2007 ஊழல் நாடுகளின் பட்டியல் ]</ref>. அப்பட்டியலின் மூலம், கம்போடியா தென் கிழக்கு ஆசியா நாடுகளில் மூன்றாவது ஊழல் மலிந்த நாடு என்பதையும் அறியலாம்.
 
[[பிபிசி]] நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கம்போடிய அரசியல் களத்தில் மலிந்திருக்கும் ஊழலை விளக்குகிறது<ref name="BBC3">BBC Asia-Pacific News ([[September 19]] [[2005]]). [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4183606.stm ''Corruption dents Cambodia democracy''.] Accessed [[July 24 [[2006]].</ref>. இவ்வுரையில் பன்னாட்டு உதவி நிதி எவ்வாறு சில கம்போடிய அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது<ref name="REUT">Reuters AlertNet ([[May 29]] [[2006]]). [http://www.alertnet.org/thenews/newsdesk/BKK237403.htm </ref>.
 
== புவியியல் ==
}}
 
[[படிமம்:Koh_thonsay_beachKoh thonsay beach.jpg|thumbnail|left|250px|கம்போடியாவின் [[கோ தொன்சே]] தீவு]]
கம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38&nbsp;°C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22&nbsp;°C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40&nbsp;°C வரை காணப்படுகிறது.
[[படிமம்:Kampong Speu.jpg|thumbnail|right|250px|பருவக்காற்று காலம் கம்போடியா]]
கம்போடியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் ஆகவும், அதன் துணை அமைப்புகளான [[உலக வங்கி]], [[பன்னாட்டு நிதியம்]] ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. மேலும், இந்நாடு, [[ஆசியான்]] அமைப்பின் பகுதியான [[ஆசிய வளர்ச்சி வங்கி]]யின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு நடந்த [[கிழக்காசிய உச்சி மாநாடு|கிழக்காசிய உச்சி மாநாட்டின்]] தொடக்க விழாவில் கம்போடியா கலந்து கொண்டது.
 
கம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன<ref> Royal Government of Cambodia.[http://www.cambodia.gov.kh/unisql1/egov/english/country.foreign_embassy.html வெளிநாட்டு தூதரகங்கள்].</ref>. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை.
2003ம் ஆண்டு, கம்போடியாவின் [[அங்கூர் வாட்]] கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் [[புனோம் பென்]] நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், [[புனோம் பென்]] நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் [[அமெரிக்க டாலர்|டாலர்]] தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு [[மார்ச் 21]]ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் தத்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.
 
== பொருளாதாரம் ==
[[படிமம்:Rice 02.jpg|thumbnail|left|250px|நாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியை பெரிதும் நம்பியிருக்கிறது.]]
2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ஏறத்தாழ் $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பில்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது. <ref>[http://www.eicambodia.org கம்போடிய பொருளாதார நிறுவனம் ]</ref>
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் [[தனியாள் வருமானம்]] குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புற சமுகம் வேளாண்மையைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, [[அரிசி]], [[மீன்]], [[மரம்]], ஆடைகள், [[ரப்பர்]] ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.
 
1997-1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. சுற்றுலா துறை கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் ஒன்றாகும். [[1997]]ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை தயாரிப்பு துறையை அடுத்து, சுற்றுலா துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.
 
[[கல்வியின்மை]]யும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும், அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன. <ref name="CIACB">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html சிஐஏ வின் தகவல் களஞ்சியம்] </ref>
 
== மக்கள் ==
 
[[பகுப்பு:கம்போடியா]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|af}}
{{Link FA|en}}
{{Link FA|km}}
 
[[ace:Kamboja]]
[[af:Kambodja]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174455" இருந்து மீள்விக்கப்பட்டது