சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: jv:Shalahuddin al Ayyubi
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 2:
| name =சலாகுத்தீன் அல்லது சலாதீன்
| title =[[எகிப்து]] மற்றும் [[சிரியா]]வின் சுல்தான்
| image =[[படிமம்:Standbeeld_Saladin_DamascusStandbeeld Saladin Damascus.JPG|240px]]
| caption =டமாசுகசில் உள்ள சலாவுத்தீனின் சிலை
| reign =1174–1193
வரிசை 21:
 
== இளமைக்காலம் ==
யூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு [[இராக்]]கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=221342 History - Saladin]</ref>. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், [[ஆர்மீனியா|அர்மீனியா]]விலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு நசிமுத்தீன் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், [[சிலுவைப்போர்]]களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்து 1939-ல் அவரது கோட்டையைப் பாதுகாக்கும் [[தளபதி]]யாகப் பணியாற்றினார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்<ref>http://books.google.com/books?id=hGR5M0druJIC</ref>. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்பிற்காக [[சிரியா]]வின் தலைநகரான [[டமாசுக்கசு]] நகருக்கு அனுப்பப்பட்டார். இந்த காலக்கட்டத்திலேயே சலாகுத்தீன் [[இசுலாம்]] மேல் அதிக ஆர்வம் கொண்டார்.<ref name="Who2 Biography: Saladin, Sultan/Military Leader">{{cite web|url=http://www.answers.com/topic/saladin|title=Who2 Biography: Saladin, Sultan / Military Leader |publisher=Answers.com|accessdate=August 20, 2008}}</ref> மாறாக, [[கிறித்தவர்]]கள் திடீரென [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைத் தாக்கிய முதலாம் [[சிலுவைப்போர்|சிலுவைப்போராலேயே]] சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர். <ref>http://www.answers.com/topic/saladin. </ref>
 
== பேரரசை நிறுவுதல் ==
=== எகிப்து ===
[[படிமம்:Saladdin Empire.PNG|left|சலாகுத்தீன் உட்சத்தில் அய்யூபிட் பேரரசு]]
சலாகுத்தீன் சிரியப் படையில் சேர்ந்தபொழுது [[ஜெரூசலம்|செருசலேம்]] முதலாவது அமல்ரிக் என்ற [[இலத்தீன்]] கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல முறைப் படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169 ஆம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31 ஆம் வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறமை, போர்முறைகள் மற்றும் அஞ்சாத குணம் ஆகியவற்றின் காரணமாக [[எகிப்து]] நாட்டின் தலைவராக மாறினார். இவரே [[சன்னி இசுலாம்|சன்னி இசுலாத்தை]] எகிப்தில் பரப்பியவர்.<ref>''Moors' Islamic Cultural Home souvenir III, 1970–1976‎'' Islamic Cultural Home, 1978, p. 7.</ref> இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட [[கலிபா]]வின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படைவலிமை மற்றும் [[பொருளாதாரம்]] வேகமாகப் பெருகியது.<br />
 
இதன் பிறகு இவர் தனது மனதில் [[சிரியா]], [[இராக்]] மற்றும் [[ஜெரூசலம்|செருசலேம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமியப் பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆயினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்குப் பிறகே [[சிரியா]]வை தனது பேரரசுடன் இணைத்தார்.
வரிசை 39:
== சிலுவைப்போர்கள் ==
{{main|சிலுவைப் போர்}}
இதன் பிறகு தனது படை வலிமையைப் பெருக்குவதில் ஈடுபட்ட சலாகுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களைத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, [[முஸ்லிம்|முசுலிம்]] வணிகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் [[முஸ்லிம்|முசுலிம்]] வணிகர்களுக்கான முதன்மைப் பாட்டையில்(சாலை) ஒரு படையை சலாகுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ரூட் நகரையும் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான [[மெக்கா]] மற்றும் [[மதீனா]] ஆகியவற்றைத் தாக்கினார்<ref name="KOVAŘÍK, Jiří 2005">KOVAŘÍK, Jiří. The sword and cross, knights battle and destinies. Praha: Mladá fronta, 2005. [dále jen Kovařík]. ISBN 80-204-1289-1</ref>. இதனால் கோபமுற்ற சலாகுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களைத் தாக்கினார்<ref> name="KOVAŘÍK, Jiří. The sword and cross, knights battle and destinies. Praha: Mladá fronta, 2005. [dále jen Kovařík]. ISBN 80-204-1289-1<"/ref>. இவ்வாறு சலாகுத்தீன் போர் நெறிமுறைகளைப் பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்குப் பதிலடியாக அப்பாவி [[முஸ்லிம்|முசுலிம்களை]] தாக்குவதயே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.<br /><br />
இதன் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாகுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்குத் துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185 ஆம் ஆண்டு சாக்ரோல் மலைத்தொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். [[கடல்]] போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாகுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி [[சிலுவைப்போர்]]களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாகுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாகுத்தீன், அவரைச் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து [[முஸ்லிம்|முசுலிம்]] மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாலும் [[இசுலாம்|இசுலாமியப்]] புனிதத் தலங்களைத் தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்<ref>Saladin Or What Befell Sultan Yusuf by Beha Ed-din, Baha' Al-Din Yusuf Ib Ibn Shaddad, Kessinger Publishing, 2004, p.42, p.114 </ref>
.<br /><br />
இந்த ஒருவரைத் தவிர மற்ற எதிரிகள் யாரையும் சலாகுத்தீன் தன் வாழ்நாளில் கொன்றதில்லை. சிறையில் அடைக்கப்பட்ட லூசிஞ்ன் கையின் மனைவி சலாகுத்தீனைக் கடிதம் மூலம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதின் பேரில், 1188-ம் ஆண்டு லூசிஞ்ன் கை விடுதலை செய்யப்பட்டு தனது மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
== செருசலேம் கைப்பற்றப்படல் ==
இதன் பிறகு [[ஜெரூசலம்|செருசலேம்]] நகரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள [[பிரெஞ்சு]]ப் படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்<ref>http://books.google.com/books?id=7CP7fYghBFQC&pg=PA1101&dq=saladin+balian+jerusalem+siege+-wikipedia+-%22Kingdom+of+Heaven%22+destroy+temple+mount&sig=lu0RI7bOVMyPYmxqHXVUiaWTkkw#v=onepage&q=saladin%20balian%20jerusalem%20siege%20-wikipedia%20-%22Kingdom%20of%20Heaven%22%20destroy%20temple%20mount&f=false</ref>. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைக் கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த [[யூதர்|யூத]] மக்களைத் தொடர்ந்து [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரிலேயே வாழ அனுமதித்தார்<ref> Scharfstein and Gelabert, 1997, p. 145. </ref>.
 
== மூன்றாம் சிலுவைப்போர்கள் ==
வரிசை 51:
இவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாகுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் [[சிலுவைப்போர்]]கள் தொடங்கப்பட்டன. இதை [[இங்கிலாந்து]] மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்தப் போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாகுத்தீனே வெற்றிபெற்றார்.
 
இருப்பினும் சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மையானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாகுத்தீன் அவரைக் குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்தனுப்பினார்<ref> http://www.islamkalvi.com/portal/?p=220</ref>. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததைக் கேள்விப்பட்ட சலாகுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டைக் கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்டின் தங்கை ‘சோன்’ என்பவளை சலாகுத்தீன் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தார். இதன் மூலம் [[முஸ்லிம்|முசுலிம்]] மற்றும் [[கிறித்தவம்|கிறித்தவர்கள்]] இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாகுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றது.
 
இதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி [[ஜெருசலேம்|செருசலேம்]] முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனிதத் தலங்களுக்கு [[புனிதப் பயணம்]] மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்<ref> Jonathan Phillips, The Crusades, 1095-1197 (New York: Pearson Education Limited, 2002) pg 150.</ref>.
 
== மறைவு ==
[[படிமம்:Damascus-SaladinTomb.jpg|thumb|right|சலாவுத்தீனின் சமாதி]]
இவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் [[டமாசுக்கசு]] நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை<ref> Bahā' al-Dīn (2002) pp 25 & 244. </ref>. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் [[டமாசுக்கசு]] நகரில் உள்ள பிரபலமான [[உமய்யா மசூதி]]யின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு [[ஜெர்மனி|செருமனி]]யை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு [[சலவைக்கல்]] கல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்<ref> Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66 </ref>. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான கல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
 
== நன்மதிப்பும் நற்பெயரும் ==
வரிசை 91:
[[பகுப்பு:1193 இறப்புகள்]]
[[பகுப்பு:1137 பிறப்புகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|ur}}
 
[[af:Saladin]]
[[als:Saladin]]
"https://ta.wikipedia.org/wiki/சலாகுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது