"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (தானியங்கி அழிப்பு: uz:Dinamit (deleted))
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
 
==வரலாறு==
[[Image:AlfredNobel_adjustedAlfredNobel adjusted.jpg|left|thumb|150px|ஆல்பிரட் நோபல்]]
[[Image:Nobel patent.jpg|left|thumb|150px|நைட்ரோகிளிசரினுக்காக 1864 இல் [[ஆல்பிரட் நோபல்|ஆல்பிரட் நோபலின்]] காப்புரிமை விண்ணப்பம்]]
டயனமைட்டு, அல்பிரெட் நோபல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபல், [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[1867]] ஆம் ஆண்டு [[மே]] மாதம் [[7]] ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து [[சுவீடன்|சுவீடனில்]] [[1867]] ஆம் ஆண்டு [[அக்டோபர்]] மாதம் [[19]] ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்<ref name=s&s-101>Schück & Sohlman (1929), p. 101.</ref> இவர் டயனமைட்டை ''நோபலின் வெடி திறன்'' என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைட்ரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்<ref name="USPat 234489">US Patent 234489 issued to Morse 16 November 1880</ref>. இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது<ref>Palmer, Brian (2010-12-29) [http://www.slate.com/id/2279457/ What do anarchists want from us?], ''[[Slate.com]]''</ref>..
==உற்பத்தி==
[[File:Explosives Magazine, Ladyha.JPG|left|upright|thumb|ஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு]]
[[File:Diatomaceous Earth BrightField.jpg|thumb|left|300px|நுண்ணுரு பெருக்காடி வழியாக பார்க்கப்பட்ட டயட்டம் மண் தோற்றம். டயட்டம் மண் மென்மையான சிலிக்கா கலந்த ஒரு செல் உடைய ஈரணு உயிரி. இது உடனே நுண்ணிய பொடியாகும் தன்மை உடையது. இது உறிஞ்சும் தன்மையுடையது. இந்த நீரிலுள்ள டயட்டம் மண் துகள்கள் படம் 6.236 பிக்செல்ஸ்/மைக்ரோமீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மொத்த பரப்பு தோராயமாக 1.13 கீழ் 0.69 மில்லிமீட்டர்.]]
தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயத்தப் படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு மிகவும் ஆபத்தானது.
 
 
==அமெரிக்கா==
[[Image:Aetna dynamite.jpg|thumb|upright|''நியூ யார்க்'' நகரில் இருந்த ''ஏட்னா'' வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.]]
[[அமெரிக்கா]]வில் 1885 ஆம் ஆண்டு ''ரஸ்ஸல் எஸ். பென்னிமன்'' என்ற [[வேதியல்]] வல்லுநர் ''அம்மோனியம் டயனமைட்டு'' என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் ''அம்மோனியம் நைட்ரேட்டு'' என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்கப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் 'எக்ஸ்ட்ரா என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. ''இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ்'' நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ''ஹெர்குலிஸ்'', ''கலிபோர்னியா'', ''அட்லாஸ்'', ''ட்ரோஜன் யு.எஸ் பவுடர்'', ''ஆஸ்டின்'', மற்றும் சில நிறுவனகள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான ''நீர்க்கூழ்ம வெடிபொருள்'' (water gel explosives) உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது<ref>[http://www2.dupont.com/Heritage/en_US/related_topics/explosives.html DuPont Heritage: Explosives].</ref>.
}}
{{Use dmy dates|date=November 2010}}
 
[[பகுப்பு:வெடிபொருள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:சுவீடன்]]
[[பகுப்பு:1866 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Dinamiet]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174626" இருந்து மீள்விக்கப்பட்டது