திருவோவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: et:Ikoon
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 30:
[[படிமம்:Ushakov Nerukotvorniy.jpg|thumb|left|200px|''மீட்பர் இயேசுவின் திருவோவியம்.'' - "கையால் செய்யப்படாத சாயல்" - மரபுவழி திருச்சபைப் பாணி. எழுதியவர்: சீமோன் உஷாக்கோவ். காலம்: 1658.]]
 
பிலாத்து [[இயேசு|இயேசுவின்]] உருவத்தை ஓவியமாக வரைந்தார் என்னும் கதை தவிர, வேறொரு நிகழ்ச்சியை நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த செசரியா நகர் யூசேபியஸ் என்னும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதேஸ்ஸா நகர் அரசர் ஆப்கார் (King Abgar of Edessa), நோய்வாய்ப்பட்ட தம் மகனைக் குணப்படுத்த [[இயேசு]] வரவேண்டும் என்று கேட்டு மடல் அனுப்பினாராம். இக்கதையில் இயேசுவின் உருவச் சாயல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் "ஆதாய் கொள்கை" (''Doctrine of Addai'') என்னும் சிரிய மொழி ஏட்டில் இயேசுவின் திருவுருவச் சாயல் குறிப்பிடப்படுகிறது. சிறிது பிற்பட்ட காலத்தில் எவாக்ரியுஸ் (''Evagrius'') என்பவர் தரும் குறிப்பின்படி, இயேசு [[சிலுவை]] சுமந்து சென்றவேளை தம் முகத்தை ஒரு துணியால் துடைத்தபோது அத்துணியில் அவருடைய சாயல் பதிந்த வரலாறு வருகிறது.<ref>''Veronica and her Cloth'', Kuryluk, Ewa, Basil Blackwell, Cambridge, 1991</ref> இயேசுவின் சாயல் அதிசயமாகப் பதிந்த அத்துணி எதேஸ்ஸா நகரில் 10ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாகவும், பின் [[காண்ஸ்டாண்டிநோபுள்|காண்ஸ்டாண்டிநோபுளுக்குச்]] சென்றதாகவும், 1204இல் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர் வீரர்கள்]] காண்ஸ்டாண்டிநோபுளைத் தாக்கியபோது அத்துணி காணாமற்போனதாகவும், அச்சாயலின் பிரதிகள் பல உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு எழுந்தது.
 
மேலும், யூசேபியஸ் "திருச்சபை வரலாறு" என்னும் தம் நூலில், [[இயேசு]], [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்ததாகவும், செசரியாவில் பான் (''Pan'') என்னும் கிரேக்க கடவுளின் வெண்கலச் சிலை இருந்ததாகவும், சிலர் அச்சிலை இயேசுவின் சாயல் என்று கூறியதாகவும் எழுதுகிறார். பான் சிலைத் தொகுதியில் இரட்டைப் போர்வை அணிந்த ஒருவர் நின்றுகொண்டு தம் கைகளை நீட்டிய நிலையில் இருந்தார் எனவும் அவர்முன் ஒரு பெண் முழந்தாட்படியிட்டு இருந்ததாகவும் அப்பெண்ணே [[லூக்கா|லூக்கா நற்செய்தியில்]] (லூக் 8:43-48) வருகின்ற நோய்வாய்ப்பட்ட பெண் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.<ref>Eusebius of Caesarea, ''Church History'' 7:18</ref>
வரிசை 91:
இருப்பினும், அறிஞர் குவார்தூச்சி இன்னொரு தகவலைத் தருகிறார். அதாவது, [[உரோமை|உரோமை நகரில்]] புனித உரோமை பிரான்சிஸ்கா (Saint Francesca Romana) கோவிலில் மரியாவின் மிகப் பழங்காலத் திருவோவியம் ஒன்று உள்ளது. அதை 1950இல் ஆய்வுசெய்தபோது, அந்த திருவோவியம் கிபி 5ஆம் நூற்றாண்டில் காண்ஸ்டாண்டிநோபுளுக்குக் கொண்டுவரப்பட்ட வட்ட வடிவ மரியா முகத்தின் எதிரெதிர் பிம்பமாக (reverse mirror image) அமைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது<ref>Margherita Guarducci, The Primacy of the Church of Rome, (San Francisco: [[Ignatius Press]], 1991) 93-101.</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Santa_Francesca_Romana,_Rome உரோமையில் மரியா திருவோவியம்]</ref>
 
பிற்காலத்தில், புனித லூக்காவால் வரையப்பட்டதாகக் கருதப்படுகின்ற மரியா திருவோவியங்கள் பலவாகப் பெருகின.<ref>James Hall, ''A History of Ideas and Images in Italian Art'', p.111, 1983, John Murray, London, ISBN 0-7195-3971-4</ref> எடுத்துக்காட்டாக,
* உரோமையில் [[புனித மரியா பெருங்கோவில்|புனித மரியா பெருங்கோவிலில்]] உள்ள திருவோவியம்;
* விளாடிமீர் நகர இறையன்னை திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Theotokos_of_Vladimir விளாடிமீர் இறையன்னை]</ref>;
* ஆத்தோஸ் மலையில் அமைந்த துறவற இல்லத்தில் உள்ள மரியா திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Panagia_Portaitissa ஆத்தோஸ்]</ref>
* திக்வின் திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Tikhvin_icon திக்வின் திருவோவியம்]</ref>
* ஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்<ref>[http://en.wikipedia.org/wiki/Theotokos_of_Smolensk ஸ்மோலென்ஸ்க் நகர் மரியா திருவோவியம்]</ref>
* கருப்பு அன்னை மரியா திருவோவியம் (Black Madonna of Częstochowa)<ref>[http://en.wikipedia.org/wiki/Black_Madonna_of_Cz%C4%99stochowa கருப்பு அன்னை மரியா]</ref>
 
வரிசை 158:
[[இயேசு|இயேசுவைச்]] சித்தரித்த பண்டைய ஓவியங்கள் பொதுப் பாணியில் இருந்தன. அவற்றில் இயேசு இளமைப் பருவத்தினராக சித்தரிக்கப்பட்டார். அவருக்குத் தாடி இருக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் இயேசுவை நீண்ட முடியுடையவராக, தாடியுடையவராக சித்தரிக்கும் பாணி இறுகிய முறையிலான பாணியாக மாறியது.
 
இயேசுவும் மரியாவும் உண்மையிலேயே எவ்வாறு தோற்றமளித்தனர் என்பது யாருக்கும் தெரியாது என்று [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகுஸ்தீன்]] கூறியதை இவண் கருதலாம்.<ref>St. Augustine, ''De Trinitatis'' 8:4-5.</ref> ஆனால் அகுஸ்தீன் [[இயேசு]] பிறந்து, வளர்ந்த [[திருநாடு|திருநாட்டில்]] வாழ்ந்தவரல்ல. எனவே, அப்பகுதி மக்களின் பழக்கங்களையும் வாய்மொழி மரபுகளையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
இயேசுவைச் சித்தரித்த ஆளோவியம் முதலில் ஒரே பாணியில் இருக்கவில்லை. செமித்திய பாணி இயேசுவைச் சிறிது சுருள்முடி கொண்டவராகச் சித்தரித்தது. கிரேக்க பாணி இயேசுவைத் தாடியுடையவராகவும், (கிரேக்க கடவுள் [[சூசு|சூஸ்]] போல) தலையில் நடுப்பகுதி வகிடு கொண்டவராகவும் சித்தரித்தது. இவற்றுள், சிறிது சுருள்முடி கொண்ட [[இயேசு]] ஓவியமே மிக இயல்பானது என்று பண்டைக்கால எழுத்தாளர் தெயதோருஸ் லெக்டோர் என்பவர் கூறினார்<ref>Theodorus Lector, ''Church History 1:15.</ref> அவர் கூறிய ஒரு வரலாற்று நிகழ்ச்சியை [[தமாஸ்கஸ் நகர யோவான்|புனித தமஸ்கு யோவான்]] என்னும் மற்றொரு எழுத்தாளர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: கிரேக்க மதத்தைச் சார்ந்த ஓர் ஓவியரிடம் இயேசுவின் படத்தை வரையச் சொன்னபோது அவர் இயேசுவுக்குத் தாடியும், தலையில் நடு வகிடும் வைத்து வரைந்தாராம். அதற்குத் தண்டனை போல, அவரது கைகள் சூம்பிப்போயினவாம்.
 
கிறித்தவத் திருவோவியங்கள் திருச்சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது 6ஆம் நூற்றாண்டில்தான் என்று தெரிகிறது.<ref>Belting, ''Likeness and Presence'', [[University of Chicago Press]], 1994.</ref> அவை வழிபாட்டின்போது பயன்படுத்தப்பட்டன. அவை புதுமைகள் புரிந்ததாகவும் மக்கள் ஏற்றனர்.<ref>Patricia Karlin-Hayter, The Oxford History of Byzantium, Oxford, 2002.</ref> 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, திருவோவியங்கள் புரிந்த புதுமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.<ref>Mango, ''The Art of the Byzantine Empire 312-1453'', [[University of Toronto Press]], 1986.</ref>
வரிசை 168:
== திருவோவிய எதிர்ப்பு இயக்கம் ==
 
கிபி 8ஆம் நூற்றாண்டில் திருவோவிய எதிர்ப்பு இயக்கம் (Iconoclasm)<ref>[http://en.wikipedia.org/wiki/Iconoclastic_Controversy திருவோவிய எதிர்ப்பு இயக்கம்]</ref> தோன்றியது.
 
திருவோவியங்களை வணக்கத்துக்குரிய பொருள்களாகக் கருதலாமா என்பது பற்றிய விவாதம் கிபி 4ஆம் நூற்றாண்டிலிருந்தே அவ்வப்போது எழுந்ததுண்டு.<ref>Belting, ''Likeness and Presence'', Chicago and London, 1994.</ref> ஆயினும் பொதுமக்கள் நடுவே திருவோவியங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.<ref>Ernst Kitzinger, ''The Cult of Images in the Age before Iconoclasm'', Dumbarton Oaks, 1954, quoted by Pelikan, Jaroslav; ''The Spirit of Eastern Christendom'' 600-1700, University of Chicago Press, 1974.</ref>
வரிசை 220:
*மரியா திருவோவியத்தில் மரியா நீல உள்ளாடையும் சிவப்பு வெளியாடையையும். அணிந்திருப்பார். அதன் பொருள் "மனிதப் பிறவியாகிய மரியாவுக்குக் கடவுள் தெய்விகக் கொடைகளை அளித்துள்ளார்" என்பதாகும்.
*இவ்விதத்தில், கடவுள் மனிதரை அன்புசெய்து, அவர்களுக்குத் தம் அருள்கொடைகளை வழங்கி, அவர்களைத் தெய்விக நிலைக்கு உயர்த்துகிறார் என்னும் உண்மை திருவோவியம் வழியாக அறிவிக்கப்படுகிறது.
*திருவோவியங்களில் காணப்படும் (கிரேக்க) எழுத்துகளுக்கும் பொருள் உண்டு. பல திருவோவியங்களில் அவற்றில் வரும் ஆள்கள்/நிகழ்ச்சிகளின் பெயர்கள் முழுதுமாக அல்லது சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும்.
 
== ஆதாரங்கள் ==
வரிசை 228:
[[பகுப்பு:கிறித்தவ ஓவியங்கள்]]
[[பகுப்பு:திருவோவியங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[af:Ikoon]]
"https://ta.wikipedia.org/wiki/திருவோவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது