தொற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (தானியங்கி இணைப்பு: ky:Жугуштуу оорулар)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
மருத்துவ சோதனையில், ஒரு [[நோய்|நோயானது]] [[நோய்|நோயை]] உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, [[பூஞ்சை]], [[ப்ரோட்டோசோவா]], மற்றும் பல்கல [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]] போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் '''[[தொற்றுநோய்]]''' என அழைக்கப்படுகிறது. இந்[[நோய்க்காரணி]]கள் (pathogen) [[விலங்கு]]களிலும், [[தாவரம்|தாவரங்களிலும்]] [[நோய்|நோயை]] ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.<ref>[http://www.mercksource.com/pp/us/cns/cns_hl_dorlands.jspzQzpgzEzzSzppdocszSzuszSzcommonzSzdorlandszSzdorlandzSzdmd_c_49zPzhtm Dorland's Illustrated Medical Dictionary] 2004 WB Saunders.</ref> நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, [[உணவு|உணவினால்]], தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு [[நோய்க்காவி|நோய்க்காவியினால்]] தொற்றுநோயானது கடத்தப்படலாம்.<ref name= McGraw>"Infectious disease." [http://www.mhest.com/ McGraw-Hill Encyclopedia of Science and Technology], The McGraw-Hill Companies, Inc., 2005.</ref> விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.<ref>http://www.who.int/topics/infectious_diseases/en/</ref>
 
[[நோய்க்காரணி]] ஒன்றின் '''தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது''' (infectivity), அந் [[நோய்க்காரணி|நோய்க்காரணியானது]] ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, [[ஓம்புயிர்|ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள்]] பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். '''தொற்றும் தன்மையானது''' (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும்<ref>[http://www.doh.wa.gov/notify/other/glossary.htm Glossary of Notifiable Conditions] Washington State Department of Health</ref>. தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், [[நோய்க்காரணி|நோய்க்காரணியால்]] தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.<ref name= McGraw>"Infectious disease." ''[[McGraw-Hill Encyclopedia of Science and Technology]]''. The McGraw-Hill Companies, Inc., 2005.</ref>
 
பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது<ref name=Bruce> Bruce A. Wilcox and Duane J. Gubler (2005). ''Enviornment & Poverty Times'' (04). [http://www.crid.or.cr/cd/CD_Cambio/pdf/eng/doc76/doc76.pdf "Environmental change and infectious diseases"]</ref> <ref name=Singh-> {{cite journal |author=Debashis Singh |title=''New infectious diseases will continue to emerge'' |journal=British Medical Journal (BMJ) |volume=328 |issue=186 |pages=7433 |year=2004 |Date=24 January}}</ref>.
 
== நோய்க்கடத்தல் ==
=== உலகம்பரவு நோய் வரலாறு ===
* கி.மு 540-750 ஆண்டுகளில், ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை தொற்றுநோய், ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது<ref>[http://eee.uci.edu/clients/bjbecker/PlaguesandPeople/lecture3.html Infectious and Epidemic Disease in History]</ref>.
* 1342-1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின் ‘[[கறுப்பு இறப்பு]] காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.
* 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தேடலறிஞர்களால், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான [[பெரியம்மை]] (smallpox), [[தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (measles), [[தைஃபசு]] (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518-1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது<ref name= Dobson>Dobson, Andrew P. and E. Robin Carter (1996) [http://www.erin.utoronto.ca/~w3gwynne/BIO418/Dobson1996.pdf Infectious Diseases and Human Population History '''(full-text pdf)'''] Bioscience;46 2.</ref>.
* 1556-1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான [[இன்ஃபுளுவென்சா]] எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது<ref name= Dobson/>.
* 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது<ref>[http://www.cdc.gov/TB/pubs/mdrtb/default.htm Multidrug-Resistant Tuberculosis]. ''Centers for Disease Control and Prevention.''</ref>. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.
* 1918ஆம் ஆண்டில் பரவிய இசுப்பானிய [[இன்ஃபுளுவென்சா]] (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது<ref>[http://www.history.navy.mil/library/online/influenza_main.htm Influenza of 1918 (Spanish Flu) and the US Navy]</ref>.
* தற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 - 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.
* 2009 ஆம் ஆண்டில் [[பன்றிக் காய்ச்சல்]] எனும் [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சல் உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது 1918ஆம் ஆண்டில் பரவி, மக்கள் இறப்பை ஏற்படுத்திய இசுப்பானிய [[இன்ஃபுளுவென்சா]] விற்கான [[நோய்க்காரணி|நோய்க்காரணியுடன்]] நெருங்கிய தொடர்புடையதாக இருந்தபோதிலும், அவற்றிலிருந்து வேறுபட்டு உருவாகிய புதிய வகையாக (strain) காணப்படுகிறது. [http://www.msnbc.msn.com/id/31207627#storyContinued][http://www.cnn.com/2009/HEALTH/06/11/swine.flu.who/index.html].
 
[[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]] அறிக்கையின்படி, உலக மக்கள் தொகை இறப்பில் 25%, தொற்றுநோய்த் தாக்கத்தால் ஏற்படுகின்றது[http://www.who.int/infectious-disease-report/pages/graph1.html]. இவற்றில் 90% இறப்பை, [[நுரையீரல் அழற்சி]] அல்லது நியூமோனியா (Pneumonia), [[இன்ஃபுளுவென்சா]] போன்ற சுவாசத் தொகுதி தொடர்பான தொற்றுநோய்களும், [[எய்ட்சு]] என்று அழைக்கப்படும் நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயும், வயிற்றுப் போக்கு (Diarrhoea) தொடர்பான தொற்றுநோய்களும், [[காசநோய்]] (Tuberculosis), [[மலேரியா]] (Malaria), [[தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (Measles) நோய்களுமே ஏற்படுத்துகின்றன [http://www.who.int/infectious-disease-report/pages/graph5.html].
 
== மேலதிக இணைப்புக்கள் ==
* [http://www.webmd.com/news/20080220/new-infectious-diseases-on-the-rise புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பு]
* [http://www.sciencedaily.com/releases/2009/05/090519104111.htm பன்றிக் காய்ச்சலும், வேறு புதிய தொற்றுநோய்களும்]
 
 
== அடிக்குறிப்புகள் ==
[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:நுண்ணுயிரியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[ar:مرض معد]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174680" இருந்து மீள்விக்கப்பட்டது