புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 17:
| binomial_authority = ([[Carolus Linnaeus|Linnaeus]], [[1758]])
}}
[[Image:Blackbuck (Antilope cervicapra)- Male & female in Hyderabad, AP W IMG 7268.jpg|thumb|ஆண், பெண் புல்வாய்கள். ]]
 
'''புல்வாய்''' (''Blackbuck'') [[இந்தியா|இந்திய]]த் துணைக் கண்டத்தைத் தோன்றிடமாகக் கொண்ட மான் இனமாகும். புல்வாய் மானுக்கு '''திருகுமான்''', '''வெளிமான்''', '''முருகுமான்''' என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. '''கலைமான்''' அல்லது '''இரலை'''<ref>செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி; கருமான்; "இரலையுங் கலையும் புல்வாய்க்குரிய (தொல். பொருள் 600); "இரலை நன்மான் இனம் பரந்தவை போல்" (அகநா. 194)</ref> <ref>கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1974</ref> , '''கருஞ்சிக் கிடாய்''' என்பன இவ்வினத்தில் பெண்ணினத்திலிருந்து மாறுபட்ட தோற்றத்தையுடைய ஆண்மான்களைச் சிறப்பித்து வழங்கும் சொற்கள். இம்மான்கள் அகன்ற சம தரை வெளிகளில் பெருந்திரள்களாக குடியிருந்தன. மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றதால் இப்பொழுது இவற்றின் தொகை குறைந்துவிட்டது; இப்பொழுது பெருந்திரள்களைக் காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை மானினம் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சாஸ்]] மாநிலத்தில் காணப்படுகின்றது. அத்துடன் [[அர்ஜெண்டினா]]வின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாகச் செல்லும் விலங்கு புல்வாய் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மணிக்கு சுமார் 64-96 [[கிமீ]] (40-60 [[மைல்]]) வேகத்தில் பாய்ந்து செல்லும்<ref>மா. கிருஷ்ணன் (தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்), 2004. மழைக்காலமும் குயிலோசையும். காலச்சுவடு பதிப்பகம். சென்னை</ref>.
 
==உடல் அமைப்பு==
வரிசை 28:
 
==வியத்திவரலாறும் இனப்பெருக்கமும்==
இருபாலும் தன்னுடைய 1.5 முதல் 2 ஆண்டுகளில் பருவமடைகின்றன. ஆண்டு முழுவதும் [[இனப்பெருக்கம்]] நடந்தாலும் [[மார்ச்சு]] முதல் [[மே]] வரையிலும் [[ஆகஸ்டு]] முதல் [[அக்டோபர்]] வரையிலும் மிக கூடுதலான இனப்பெருக்கங்கள் நடக்கின்றன<ref>Schaller, G. B. 1967. The deer and the tiger. The University of Chicago Press, Chicago. Pp. 370.</ref>. இனப்பெருக்க காலத்தில் ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும். சராசரியாக ஒரு ஆணின் எல்லை 1 முதல் 17 [[எக்டயார்|ஹெக்டர்]] வரையிலும் இருக்கும்<ref>Isvaran, K. 2003. The evolution of lekking: Insights from a species with a flexible mating system. Ph.D. Dissertation, University of Florida, Gainesville.</ref> <ref>Mungall, E. C. 1978. The Indian Blackbuck Antelope: A Texas View. Kleberg Studies in Natural Resources, College Station, Texas, USA.</ref> <ref>Prasad, N. L. N. S. 1981. Home range, dispersal, and movement of blackbuck (Antilope cervicapra) population in relation to seasonal change in Mudmal and environs. Ph. D. dissertation, Dept. of Biosciences, Saurashtra University, Rajkot, India.</ref>. ஆண் தன்னுடைய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான புல்வாய்களை அதிக காலம் வைத்திருக்கும். ஆண் தன்னுடைய எல்லையை 2 [[வாரம்]] முதல் 8 [[மாதம்]] வரை பாதுகாக்கும். இவை தங்களுடைய எல்லைகளை சிறுநீர், மலம், ஒரு வகையான தூண்டுசுரப்பை மூலம் குறித்து வைத்துக்கொண்டு<ref>Isvaran, K. and Jhala, Y. V. 2000. Variation in lekking costs in blackbuck (Antilope cervicapra): relationship to lek-territory location and female mating patterns. Behaviour 137, 547-563.</ref>, அந்த எல்லையைச் சுற்றிச் சுற்றி வரும். அப்பொழுது வேறொரு ஆண் தன் எல்லையில் நுழைந்தாலோ வேறு வகையான எல்லைச் சிக்கல்கள் வரும்பொழுதோ, தன்னுடைய தோற்றத்தை வைத்தும் எச்சரிக்கை சைகைகள் எழுப்பியும் எல்லையைப் பாதுகாக்கும். மிகவும் அரிதாகக் கொம்புகளைக் கொண்டு முட்டி மோதி சண்டைகள் நடக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 10-12 ஆண்டுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. புல்வாய்கள் ஒரு ஆணின் எல்லையில் நுழையும் முன்பு அங்கிருக்கும் சிறுநீர், மலத்தை தூண்டுசுரப்பை நுகர்ந்து அந்த எல்லைக்குள் செல்வது குறித்து முடிவு செய்யும்.
 
இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 5 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கும். குட்டி ஈன்ற இரண்டு வாரங்களில் தாய் அடுத்த சினைக்குத் தயாராகும். ஈன்ற குட்டியை தாய் புற்களால் ஆன படுக்கையில் படுக்கவைத்திருக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு மிக தொலைவான இடங்களுக்கு குட்டியை அழைத்துச் செல்லாது. ஆண் புல்வாய்கள் குட்டிகளின் பராமரிப்பில் ஈடுபடா.
வரிசை 35:
இவ்விலங்கின் வாழ்விடம், புல்வெளிகள் திருத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற செயல்களால் மிகவும் பிளவு பட்டுள்ளது. தவிர, காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் புல்வாய்களின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் ஆகியிருக்கின்றன. மேலும், இவ்விலங்கின் வாழ்விடம் சீர் கெட்டமையால் இவை அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களாலும் கொல்லப்படுகின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் புல்வாய்களின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தல் ஆகும். முற்காலத்தில் புல்வாய்கள் இந்தியாவிலிருந்து [[அமெரிக்கா]]வின் டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. இன்று அங்கு 20,000 க்கும் அதிகமான புல்வாய்கள் காணப்படுகின்றன.
 
[[Image:Distribution_map_of_BlackbuckDistribution map of Blackbuck.jpg‎|right|thumb|350px|புல்வாயின் வாழிடங்கள் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது<ref>http://www.wii.gov.in/envis/ungulatesofindia/</ref>]]
==காணப்படும் இடங்கள்==
* [[கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம்]] (தமிழ் நாடு)
வரிசை 87:
* [http://ces.iisc.ernet.in/kavita/Isvaran_2005.pdf Female grouping best predicts lekking in blackbuck (Antilope cervicapra)] - Kavita Isvaran - {{ஆ}}
* [http://www.wii.gov.in/envis/ungulatesofindia/Tripura-Northeast%20.htm Indian Antelope or Blackbuck] - {{ஆ}}
* [http://www.ultimateungulate.com/Artiodactyla/Antilope_cervicapra.html Antilope cervicapra]
* http://ces.iisc.ernet.in/kavita/Quader_etal_2004.pdf
* http://ces.iisc.ernet.in/kavita/Isvaran_StMary_2003.pdf
வரிசை 94:
[[பகுப்பு:மான்கள்]]
[[பகுப்பு:இந்திய பாலூட்டிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[av:Гарна]]
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது