"மனித மூளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
bot adding hidden cat AFTv5Test & gen cleanup
சி (தானியங்கி இணைப்பு: gu:મગજ)
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
[[படிமம்:Skull and brain normal human ta.svg|thumb|மனித மூளை, மண்டையோட்டின் வரைபடம்.]]
'''மனித மூளை''' மனித [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், [[இச்சையின்றிய செயற்பாடு|இச்சை இன்றிய செயற்பாடுகளான]] [[மூச்சுவிடுதல்]], [[சமிபாடு]] (செரிமானம்), [[இதயத்துடிப்பு]], [[கொட்டாவி]]<ref>V.S. Ramachandran, {{cite web | url =http://www.edge.org/3rd_culture/ramachandran/ramachandran_p1.html | title = Mirror Neurons and imitation learning as the driving force behind "the great leap forward" in human evolution | accessdate = 2006-11-16 }}</ref> போன்ற செயற்பாடுகளையும்,<ref name='nih'> {{cite web|url=http://science.education.nih.gov/supplements/nih4/self/guide/info-brain.htm |title=Information about the Brain (மூளையைப் பற்றிய தகவல்கள்) |accessdate=2009-07-02 |publisher=National Institutes of Health }}</ref> விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
 
மனிதனின் [[மூளை]], மற்ற [[பாலூட்டி]]களின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த [[பெருமூளைப் புறணி]]ப் (''cerebral cortex'') பகுதியாகும். [[நரம்பிழையம்|நரம்பிழையத்தால்]] (''neural tissue'') உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் [[முன்மூளை]]யில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற [[விலங்கு]]களில் இருந்து [[மனிதர்|மனிதனைப்]] பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், [[பகுத்தறிவு|பகுத்தறிதல்]], [[கல்வி|கற்றறிதல்]] ஆகியவற்றிக்குக் காரணமான [[மூளையின் முன் மடல்]]கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், [[கண்]] பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
== அமைப்பு ==
[[படிமம்:Visible Human head slice.jpg|thumb|200px|right| வயதுக்கு வந்த ஒரு ஆணின் மூளையின் கிடைமட்ட வெட்டு தோற்றம்; [[பெருமூளைப் புறணி]] (cerebral cortex) பகுதியையும் அதற்கு கீழ் இருக்கும் [[வெண்பொருள்(மூளை)|வெண்பொருள்]] (white matter)பகுதியையும் காணலாம்.]]
மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 [[கிலோகிராம்]] எடையும், <ref name=CarpenterCh1>[[#refCarpenter|''Carpenter's Human Neuroanatomy'']], Ch. 1</ref> 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது.<ref name="Kelly2007">[[#refCosgrove|Cosgrove et al., 2007]]</ref> மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான [[மயலின் உடைய நரம்பிழை]]கள் (''myelinated fibre'') வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.<ref name="Marner">Marner L, Nyengaard JR, Tang Y, Pakkenberg B. (2003Marked loss of myelinated nerve fibers in the human brain with age. J Comp Neurol. 462(2):144-52. {{PMID|12794739}}</ref>
 
[[படிமம்:NIA human brain drawing Tamil.png|thumb|300px|left| மூளையின் முக்கிய பகுதிகளை காட்டும் வரைபடம்]]
மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை [[பெருமூளை அரைக்கோளங்கள்]] (''cerebral hemispheres'') என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.<ref>[[#refPrinciples|''Principles of Neural Science'']], p 324</ref> பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி [[மூளைத்தண்டு]] என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி [[சிறுமூளை]] (''cerebellum'') என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். [[எலி]], [[சுண்டெலி]]யின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான [[திமிங்கலம்|திமிங்கலமும்]], [[ஓங்கில்|ஓங்கிலும்]] (''dolphin'') மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன.
 
மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்க]] (''coma'') நிலைக்கு உட்படுவான்.
4.[[பிடரி மடல்]] (occipital lobe)<br />
]]
[[படிமம்:Gray188_skull_left_lateral_indexGray188 skull left lateral index.png|350 px|thumb|right| மனித மண்டையோட்டின் எலும்புகள்.]]
பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.[[உடற்கூறு வல்லுநர்]]கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, [[முன் மடல்]] (''frontal lobe''), [[சுவர் மடல்]] (''parietal lobe''), [[பக்க மடல்]] (''temporal lobe''), மற்றும் [[பிடரி மடல்]] (''occipital lobe''). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
== கலைச் சொற்கள் ==
 
# frontal lobe - முன் மடல்
# parietal lobe -சுவர் மடல்
# temporal lobe -பக்க மடல்
# cerebellum - சிறுமூளை
# cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள்
# cerebral - பெருமூளை
# cortex - புறணி (புறத்தே இருப்பதால் புறணி)
# cerebral cortex - பெருமூளைப் புறணி
# nerve tissue - நரம்பிழையம்
# myelinated fiber - மயலின் உடைய நரம்பிழை
# white matter - வெண் பொருள்
# grey matter - சாம்பல் நிறப் பொருள்
# closed head injuries - உள் தலை காயங்கள்
# brain stem - மூளைத்தண்டு
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
* <cite id="refAndrews">{{cite book
* Campbell, Neil A. and Jane B. Reece. 2005''Biology''. Benjamin Cummings. ISBN 0-8053-7171-0
</div>
 
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:மூளை]]
[[பகுப்பு:நரம்பியல்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|uk}}
 
[[af:Brein]]
[[am:አንጎል]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1174791" இருந்து மீள்விக்கப்பட்டது