மிளகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ne:मरिच
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 20:
==வரலாறு==
[[Image:Sa-pepper.jpg|thumb|left|மிளகு]]
[[இந்தியா]]வை [[இயற்கை]] வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. <ref name=DS>Davidson & Saberi 178</ref> [[மலேசியா]] போன்ற [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு]] ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், [[இந்தியா]]வில் உள்ள [[கேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]ப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. <ref>J. Innes Miller, ''The spice trade of the roman Empire'' (Oxford: Clarendon Press, 1969), p. 80</ref> மிளகு [[வாணிகம்]] மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
 
இடைக்காலத்தில் [[இந்தியா]]வின் [[கேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]யில் விளைந்த மிளகு உலகமெங்கும் [[சந்தை]] படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், [[ஜாவா]], [[சுமத்திரா]], [[மடகாஸ்கர்]] போன்ற தீவுகளிலும், [[இந்தோனேசியா]], மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு [[சீனா]]விலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், [[ஐரோப்பா]]வின் மிளகு [[வணிகம்]] [[இந்தியா]]வை நம்பியே இருந்தது. <ref>Dalby p. 93.</ref>
 
[[இந்தியா]]வில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. [[லண்டன்|லண்டனில்]] டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.<ref> எஸ் இராம கிருஷ்ணன், 'கோடுகள் இல்லா வரைபடம்' பக்.22</ref> ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. <ref> 'Albuquerque- Caesar of the East' Edit& Trans R.F.Earle and John Villiers. University of Cambridge. London. 1982 </ref> ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, [[இந்தியா]]வுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே [[இந்தியா]]விற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
இடைக்காலத்தில் [[இந்தியா]]வின் [[கேரள மாநிலம்|கேரளக்]] [[கடற்கரை]]யில் விளைந்த மிளகு உலகமெங்கும் [[சந்தை]] படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், [[ஜாவா]], [[சுமத்திரா]], [[மடகாஸ்கர்]] போன்ற தீவுகளிலும், [[இந்தோனேசியா]], மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு [[சீனா]]விலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், [[ஐரோப்பா]]வின் மிளகு [[வணிகம்]] [[இந்தியா]]வை நம்பியே இருந்தது. <ref>Dalby p. 93.</ref>
[[இந்தியா]]வில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. [[லண்டன்|லண்டனில்]] டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது.<ref> எஸ் இராம கிருஷ்ணன், 'கோடுகள் இல்லா வரைபடம்' பக்.22</ref> ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. <ref> 'Albuquerque- Caesar of the East' Edit& Trans R.F.Earle and John Villiers. University of Cambridge. London. 1982 </ref> ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, [[இந்தியா]]வுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே [[இந்தியா]]விற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
 
=== பண்டைய காலம் ===
[[Image:Italy_to_India_RouteItaly to India Route.PNG|right|250px|frame|ஐரோப்பாவிலிருந்து தென் இந்தியா வரை நீளும் மிளகு வணிக பாதை]]
மிளகை பண்டைய காலத்தில், [[இலத்தீன்]] மொழியில் ''பைப்பர்'' என்று குறிப்பிட்டனர்.பழம்பெரும் நாகரிகமான [[எகிப்து]] நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், [[பிரமிடு]]களில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்த்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்த்தின் அரசனான [[இரண்டாம் ராம்சிஸ்]] இறப்பின்போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய [[எகிப்து]] நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு [[இந்தியா]]விலிருந்து [[எகிப்து]] வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை.
 
வரி 35 ⟶ 34:
 
==மிளகுக் கொடி ==
[[Image:Piper nigrum drawing 1832.jpg|left|thumb|200px|மிளகுக் கொடி ஓவியம் ]]
சுமார் நான்கு [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் [[மரம்]], தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இத்தாவரத்தின் [[இலை]]கள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் சிறிய [[மலர்]]கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள [[ஊசி]]யைப் போன்ற தோற்றமுடைய [[மலர்]]க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிளகாகச் சுண்டி சிறுத்துவிடும். இதுவே மிளகாகும்.
 
வரி 50 ⟶ 49:
பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
===பச்சை மிளகு===
[[Image:pepper091.jpg|thumb|150px|right|பச்சை மிளகு காய்கள் ]]
[[Image:TVM Pepper.JPG|thumb|left| இந்தியாவின் கேரளா பகுதியில் உள்ள ஒரு மிளகுக் கொடி. காய்களுடன் ]]
பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, [[கந்தக டை ஆக்சைடு]]டன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. [[வினிகர் |வினிகருடன்]] ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. [[ஆசியா|ஆசிய]] சமையல் முறைகளில் ஒன்றான, [[தாய்லாந்து]] நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. <ref>See [http://www.templeofthai.com/cooking/thai-ingredient-glossary.php தாய் சமையல்]. Retrieved 6 November 2005.</ref> <ref>Ochef, [http://www.ochef.com/205.htm பச்சை மிளகு]. Retrieved 6 November 2005.</ref> . உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.
 
===சிவப்பு மிளகு ===
[[Image:4 color mix of peppercorns.jpg|right|thumb|200px|கருப்பு, பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் வெண் நிற மிளகு வகைகள்]]
வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது. <ref>Katzer, Gernot (2006). [http://www.uni-graz.at/~katzer/engl/Pipe_nig.html மிளகு]. Gernot Katzer's தாளிப்புப் பொருள் Pages. Retrieved 12 August 2006.</ref>
 
== சமையல் ==
[[Image:Spilled_pepperSpilled pepper.jpg|left|thumb|200px|பொடியாக்கப்பட்ட மிளகு, உணவு மேசைகளில் காணப்படும் முக்கிய சுவைப்பொருளாகும்]]
தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான [[பொங்கல்]], மிளகு ரசம், மிளகுக் [[கோழி]] வருவல், [[முட்டை]] வருவல், [[உருளைக்கிழங்கு]] பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான [[செட்டிநாடு]] [[சமையல்|சமையலில்]] மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான [[மிளகாய்]], மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலத்தில், மிளகை ''பெப்பர்'' என்றும், மிளகாயைச் ''சில்லி பெப்பர்'' என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர். <ref>[http://www.etymonline.com/index.php?term=மிளகு ''மிளகு''] and [http://www.etymonline.com/index.php?term=pep ''pep'']. Retrieved 13 November 2005.</ref>
 
==மிளகு வாணிகம் ==
மிளகு ரகங்கள் அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் அறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகைகளாக அறியப்படுவன : [[மலபார்]] மிளகு மற்றும் [[தாலச்சேரி]] மிளகு. இதில் தாலச்சேரி மிளகு உயர்தரமாக மதிக்கப்படுகிறது. <ref>[http://www.penzeys.com/cgi-bin/penzeys/p-penzeyspeppercorns.html மிளகு], from Penzey's தாளிப்புப் பொருள். Retrieved 17 October 2006.</ref> [[மலேசியா]] நாட்டின் [[சரவாக்]] மிளகு , [[போர்ணியோ]]த் தீவிலும், [[இந்தோனேசியா]] நாட்டின் [[லம்பூங்]] மிளகு [[சுமத்திரா]]த் தீவுகளிலும் விளைகிறது. 2002 ஆம் ஆண்டில், மிளகு, உலக தாளிப்புப் பொருள் வாணிபத்தில் சுமார் 20 விழுக்காட்டினைப் பெற்றது. மிளகின் விலை உலகச் சந்தையில் உற்பத்திக்கேற்ப வெகுவாக மாறக்கூடியது. <ref>Jaffee p. 12, table 2.</ref> சர்வதேச மிளகுச் சந்தை [[கொச்சி]] நகரில் அமைந்துள்ளது.
 
தற்காலத்தில், [[வியட்நாம்]] நாடு உலக மிளகு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. வியட்நாமிலிருந்து, 2003 ஆம் ஆண்டில், சுமார் 82,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. வியட்நாமை அடுத்து, [[இந்தோனேசியா]] (67,000 டன்), [[இந்தியா]] (65,000 டன்), [[பிரேசில்]] (35,000 டன்), [[மலேசியா]] (22,000 டன்), [[இலங்கை]] (12,750 டன்), [[தாய்லாந்து]], [[சீனா]] ஆகிய நாடுகளும் மிளகு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. <ref>Data from [http://www.mcxindia.com/products_pepper.html Multi Commodity Exchange of India, Ltd.] Retrieved 6 November 2005.</ref>
 
==மருத்துவ குணங்கள்==
வரி 85 ⟶ 84:
== உசாத்துணைகள் ==
* எஸ் இராம கிருஷ்ணன், 'கோடுகள் இல்லா வரைபடம்' உயிர்மை பதிப்பகம்.2008
* [http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2009/06/blog-post_30.html| மூலிகை வளம்- குப்புசாமி அவர்களின் வலைப்பதிவு]
 
== வெளி இணைப்புகள் ==
வரி 94 ⟶ 93:
[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
[[பகுப்பு:மூவடுக்கிதழிகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[am:ቁንደ በርበሬ]]
"https://ta.wikipedia.org/wiki/மிளகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது