புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: co:Geografia
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 1:
[[படிமம்:Physical_worldPhysical world.jpg|thumb|333px|right|புவியின் நிலப்படம்([[:Image:Physical_worldPhysical world.jpg|Medium]]) ([[:Image:World-map-2004-cia-factbook-large-2m.jpg|Large 2 MB]])]]
 
'''புவியியல்''' என்பது [[புவி]], அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் [[தோற்றப்பாடு]]கள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, 1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான [[இடம்சார் பகுப்பாய்வு]], இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; 2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; 3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; 4) [[புவி அறிவியல்]]கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும். ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். மனிதனுக்கும், [[இயற்பு அறிவியல்|இயற்பு அறிவியலுக்கும்]] இடையே உள்ள தொடர்பாக அமைவதால், புவியியல் துறையானது, [[மானிடப் புவியியல்]], [[இயற்கைப் புவியியல்]] (physical geography) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வரிசை 9:
 
== புவியியலின் பிரிவுகள் ==
 
=== இயற்கைப் புவியியல் ===
இயற்கைப் புவியியல், புவியியலை [[பூமி|புவி]] பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் (layout), [[கற்கோளம்]] (lithosphere), [[நீர்க்கோளம்]] (hydrosphere), [[வளிமண்டலம்]], [[மேலோட்டுக் கோளம்]] (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
வரி 40 ⟶ 39:
* [[அரசியற் புவியியல்]] (Political geography) [[புவிசார் அரசியல்|புவிசார் அரசியலும்]] (Geopolitics) அடங்கலாக.
* [[வரலாற்றுப் புவியியல்]] (Historical geography)
* [[பிரதேசப் புவியியல்]] (Regional geography)
* [[சுற்றுலாப் புவியியல்]] (Tourism geography)
* [[உத்திசார் புவியியல்]] (Strategic geography)
வரி 67 ⟶ 66:
 
== புவியியலின் வரலாறு ==
[[படிமம்:Путешествия_Марко_Поло_Путешествия Марко Поло (1271-1295).jpg|right|thumb|[[மார்க்கோ போலோ|மார்க்கோ போலோவின்]] பயணங்களைக் குறிக்கும் நிலப்படம்.]]
மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த [[அனக்சிமாண்டர்]] (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோட்டை]] அளப்பதற்குக் கிரேக்கர்கள் பயன்படுத்திய, எளிமையான ஆனால் செயற்றிறன் கொண்ட கருவியைக் கண்டுபிடித்தவரும், [[கிரகணம்|கிரகணங்களை]] எதிர்வு கூறுவதற்கான வழிமுறையை வகுத்தவரும் இவரே என்று கருதப்படுகிறது. புவியியலுக்கான அடிப்படைகளைப் பல பண்டைக்காலப் பண்பாடுகளில் காண முடியும். பண்டைய, இடைக்கால, தற்காலத் தொடக்கம் ஆகிய காலப்பகுதிகளுக்குரிய சீனப் பண்பாட்டில் இதற்கான சான்றுகள் உள்ளன.
 
வரி 74 ⟶ 73:
புதிய நாடுகளைத் தேடிப்போன [[ரோம நாகரிகம்|ரோமர்கள்]] புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், [[இத்ரிசி]], [[இபின் பட்டுடா]], [[இபின் கால்டுன்]] போன்ற [[அராபியர்|அராபியர்களும்]] கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர்.
 
[[மார்க்கோ போலோ|மார்க்கோ போலோவின்]] பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான [[கோட்பாடு|கோட்பாட்டு]] அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்டுபிடிப்புக்களுக்கான காலப்பகுதியாகவும் அறியப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் புவியியல் ஒரு தனித் துறையாக அங்கீகாரம் பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவின் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் புவியியல் அறிவின் அளவு பலமடங்காக விரிவடைந்துள்ளது. புவியியலுக்கும், நிலவியல், தாவரவியல் ஆகிய அறிவியல் துறைகளுடனும், பொருளியல், சமூகவியல், மக்கட்தொகைப் பரம்பல் ஆகியவற்றுடனும் பிணைப்புகள் உருவாகி வலுப்பெற்றுள்ளன. மேற்கு நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில், புவியியல் துறை நான்கு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. இவை [[சூழல் அறுதிப்பாட்டியம்]] (environmental determinism), [[பிரதேசப் புவியியல்]] (regional geography), [[கணியப் புரட்சி]] (quantitative revolution), மற்றும் critical geography என்பனவாகும்.
 
== புவியியல் நுட்பங்கள் ==
வரி 88 ⟶ 87:
<br />
[http://www.tamilnotes.com தமிழில் கல்வி இணையம் - புவியியல்]
<br />
<br />
 
[[உலக நாடுகளின் பட்டியல்]]
 
[[பகுப்பு:புவியியல்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|lmo}}
{{Link FA|sl}}
 
[[ab:Географи]]
[[af:Geografie]]
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது