அர்கெந்தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
 
ஏற்றுக்கொள்ளப்பட்ட [[பிரதேச வல்லரசு]]ம், [[இடைத்தர வல்லரசு]]மான ஆகெந்தீனா, [[இலத்தீன் அமெரிக்கா]]வின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய [[தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யையும், மிகக்கூடிய [[வாங்கும் திறன் சமநிலை]]யையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர [[வளரும் பொருளாதாரம்]] என வகைப்படுத்துகின்றனர்.
 
==சொற்பிறப்பு==
"ஆர்கெந்தீனா" என்னும் சொல், ''[[வெள்ளி]]'' என்னும் பொருள் தரும் ''ஆர்கென்டும்'' ''(argentum)'' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. [[லா பிளாட்டா வடிநிலம்]] எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, [[மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா]] (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது [[ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம்]] என்றும் விடுதலைக்குப் பின்னர் [[ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள்]] என்றும் அழைக்கப்பட்டது.
 
இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், "ஆர்கெந்தீன் குடியரசு", "ஆர்கெந்தீன் நாடு" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன. இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, "[[ஆர்கெந்தீன் கூட்டமைப்பு]]" என வழங்கியது. இது பின்னர் 1859ல் "ஆர்கெந்தீன் நாடு" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் "ஆர்கெந்தீன் குடியரசு" எனவும் மாற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/அர்கெந்தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது