"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,487 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
"ஆர்கெந்தீனா" என்னும் சொல், ''[[வெள்ளி]]'' என்னும் பொருள் தரும் ''ஆர்கென்டும்'' ''(argentum)'' என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. [[லா பிளாட்டா வடிநிலம்]] எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, [[மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா]] (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது [[ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம்]] என்றும் விடுதலைக்குப் பின்னர் [[ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள்]] என்றும் அழைக்கப்பட்டது.<ref name="IGN">{{cite web |url= http://www.ign.gob.ar/AreaProfesional/Geografia/DatosArgentina|title= Datos de la República Arentina|language = Spanish|trans_title = Data of the Argentine Republic|last1= Albanese|first1= Rubén|year= 2009|publisher= [[Instituto Geográfico Nacional]]|accessdate=6 December 2011}}</ref>
 
இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், "ஆர்கெந்தீன் குடியரசு", "ஆர்கெந்தீன் நாடு" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன.<ref>[http://www.dircost.unito.it/cs/docs/Argentina-%20Republica%201826.htm CONSTITUCIÓN DE LA REPÚBLICA ARGENTINA (24 de diciembre de 1826) sancionada por el Congreso General Constituyente de 1824–1827] {{es}}</ref> இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, "[[ஆர்கெந்தீன் கூட்டமைப்பு]]" என வழங்கியது. இது பின்னர் 1859ல் "ஆர்கெந்தீன் நாடு" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் "ஆர்கெந்தீன் குடியரசு" எனவும் மாற்றப்பட்டது.<ref name="IGN"/>
 
==அரசியல் பிரிவுகள்==
{{Argentina imagemap with province names|float=right}}
ஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் ''பார்ட்டிடோசு'' என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன.<ref name="Balmaceda19"/> நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.<ref name="Balmaceda24">Balmaceda, p. 24</ref>
 
ஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், [[சுசூய் மாகாணம்]], [[சால்ட்டா மாகாணம்|சால்ட்டா மாகாணத்தில்]] இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.<ref name="Balmaceda19">Balmaceda, p. 19</ref>
 
1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூகுவேன், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய [[ஆளுனரகம்|ஆளுனரகங்கள்]] நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், சுசூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன.<ref name="Balmaceda19"/> 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூகுவேன், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.<ref name="Balmaceda19"/>
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1176190" இருந்து மீள்விக்கப்பட்டது