"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
ஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் ''பார்ட்டிடோசு'' என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன.<ref name="Balmaceda19"/> நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.<ref name="Balmaceda24">Balmaceda, p. 24</ref>
 
ஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், [[சுசூய்குகூய் மாகாணம்]], [[சால்ட்டா மாகாணம்|சால்ட்டா மாகாணத்தில்]] இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.<ref name="Balmaceda19">Balmaceda, p. 19</ref>
 
1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூகுவேன்நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய [[ஆளுனரகம்|ஆளுனரகங்கள்]] நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், சுசூய்குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன.<ref name="Balmaceda19"/> 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூகுவேன்நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.<ref name="Balmaceda19"/>
 
{|
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1176367" இருந்து மீள்விக்கப்பட்டது