"அர்கெந்தீனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,900 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==புவியியல்==
[[File:Argentina topo blank.jpg|thumb|right|200px|ஆர்கெந்தீனாவின் நிலத்தோற்றப் படம்]]
ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[அன்டெசு மலைத்தொடர்]] இதன் மேற்கிலும், [[தென் அத்திலாந்திக் பெருங்கடல்]] இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான [[பம்பாசு]] நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. [[மெசொப்பொத்தேமியா, ஆர்கெந்தீனா|மெசொப்பொத்தேமியா]] என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. [[பரானா ஆறு|பரானா]], [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. [[கிரான் சாக்கோ]] என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. [[கூயோ]] என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், [[ஆர்கெந்தீன வடமேற்கு]] என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. [[பட்டகோனியா]] பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.
 
கடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள [[லகுனா டெல் கார்பொன்]] ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும்.
 
ஆர்கெந்தீனாவின் மிகப் பெரிய ஆறு [[பரானா ஆறு|பரானா]]. பில்க்கோமாயோ, [[பராகுவே ஆறு|பராகுவே]], பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, [[உருகுவே ஆறு|உருகுவே]] என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா [[கழிமுகம்|கழிமுகத்தை]] உருவாக்குகின்றன.
 
4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1176384" இருந்து மீள்விக்கப்பட்டது