ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
நியூட்டனின் நுண்ணிமக் கொள்கையின்படி ஒளியானது அடர்வுமிகுந்த ஊடகத்தில் செல்லும்போது அதன் திசைவேகம் அதிகரிக்கவேண்டும், ஆனால் அலைக் கோட்பாடு அதற்கு நேர்மாறான முடிவைத் தந்தது. அக்காலகட்டத்தில் ஒளியின் திசைவேகத்தை மிகச்சரியாக அளவிடப்படமுடியாததால் இரண்டு கொள்கைகளில் எது சரியானது எனத் தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. 1850-இல் லியான் ஃபோகால்டு என்பார் ஓரளவுக்கு சரியாக ஒளியின் திசைவேகத்தை அளந்தார்.<ref>{{Citation | title = Understanding Physics | author = David Cassidy, Gerald Holton, James Rutherford | publisher = Birkhäuser | year = 2002 | isbn = 0-387-98756-8 | url = http://books.google.com/?id=rpQo7f9F1xUC&pg=PA382 }}</ref> அவரது சோதனை முடிவுகள் அலைக் கோட்பாட்டுக்கு சாதகமாக அமைந்தன, இதன்மூலம் பழைய துகள் கோட்பாடு ஓரங்கட்டப்பட்டது; எனினும், வேறுவடிவில் துகள் கோட்பாடு 20-ஆம் நூற்றாண்டில் நிலைபெற்றது.
 
=== குவாண்டம் கோட்பாடு (பகவக் கோட்பாடு) ===
 
1900-ஆம் ஆண்டில் மாக்சு பிளாங்க் என்பார் [[கரும்பொருள் கதிர்வீச்சு|கரும்பொருள் கதிர்வீச்]]சை விவரிக்கையில் ஒளியானது அலையாக இருப்பினும், அவற்றின் அதிர்வெண்களைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலையே இழக்கவோ பெறவோ இயலும் என்பதைக் கண்டறிந்தார். இந்த ஒளியாற்றல் கட்டிகளை ''குவாண்டா''(quanta) - பகவம் - என்று குறித்தார். 1905-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், [[ஒளிமின் விளைவு|ஒளிமின் விளை]]வை விவரிக்கையில் ஒளிப்பகவக் கொள்கையைப் பயன்படுத்தினார். 1923-ஆம் ஆண்டு ஆர்தர் காம்ப்டன் என்பார், செறிவுகுறைந்த எக்சு-கதிர்கள் எலக்ட்ரான்களால் சிதறடிக்கப்படும்போது ([[காம்ப்டன் சிதறல்]]) ஏற்படும் அலைநீள மாற்றம் துகள் கோட்பாட்டின் மூலமே விவரிக்கப்பட முடியும், அலைக் கோட்பாட்டால் அவ்வாறு விவரிக்க இயலாது எனக் கண்டறிந்தார். 1926-இல் கில்பர்ட் என். லூவிசு என்பார் இத்தகைய ஒளிக் கட்டித் துகள்களுக்கு [[ஒளியணு]]க்கள் (ஃபோட்டான்கள்) எனப் பெயரிட்டார்.
 
=== மின்காந்த கோட்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது