ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
1900-ஆம் ஆண்டில் மாக்சு பிளாங்க் என்பார் [[கரும்பொருள் கதிர்வீச்சு|கரும்பொருள் கதிர்வீச்]]சை விவரிக்கையில் ஒளியானது அலையாக இருப்பினும், அவற்றின் அதிர்வெண்களைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆற்றலையே இழக்கவோ பெறவோ இயலும் என்பதைக் கண்டறிந்தார். இந்த ஒளியாற்றல் கட்டிகளை ''குவாண்டா''(quanta) - பகவம் - என்று குறித்தார். 1905-இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், [[ஒளிமின் விளைவு|ஒளிமின் விளை]]வை விவரிக்கையில் ஒளிப்பகவக் கொள்கையைப் பயன்படுத்தினார். 1923-ஆம் ஆண்டு ஆர்தர் காம்ப்டன் என்பார், செறிவுகுறைந்த எக்சு-கதிர்கள் எலக்ட்ரான்களால் சிதறடிக்கப்படும்போது ([[காம்ப்டன் சிதறல்]]) ஏற்படும் அலைநீள மாற்றம் துகள் கோட்பாட்டின் மூலமே விவரிக்கப்பட முடியும், அலைக் கோட்பாட்டால் அவ்வாறு விவரிக்க இயலாது எனக் கண்டறிந்தார். 1926-இல் கில்பர்ட் என். லூவிசு என்பார் இத்தகைய ஒளிக் கட்டித் துகள்களுக்கு [[ஒளியணு]]க்கள் (ஃபோட்டான்கள்) எனப் பெயரிட்டார்.
 
நவீன குவாண்டம் எந்திரவியலானது ஒளியை அலையாகவும் துகளாகவும் தக்கவாறு எடுத்துக்கொள்கிறது; அதாவது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் அலையுமற்ற துகளுமற்ற ஒரு நிகழ்வாகவும் இது கருத்திலெடுத்துக் கொள்கிறது. காம்ப்டன் சிதறலில் இருக்கும் எக்சு-கதிர்கள் மற்றும் ரேடியோ அலைகள் போன்றவற்றில், அதாவது குறைந்த அதிர்வெண்களில், ஒளியானது அலை போலவே செயல்படுகிறது, அதிக அதிர்வெண்களில் ஒளியானது துகள் போல செயல்படுகிறது; ஆயினும், இருவித பண்புகளில் ஒன்றை முழுவதுமாக எப்போதுமே இழப்பதில்லை. காண்புறு ஒளியானது நடுநிலையான அதிர்வெண்களைக் கொண்டது, சோதனைகள் மூலமாக காண்புறு ஒளியானது சில இடங்களில் அலையாகவும் சில இடங்களில் துகளாகவும் சில இடங்களில் இரண்டாகவுமே செயல்படுவதை நிரூபிக்கலாம்.
 
=== மின்காந்த கோட்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது