ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
=== மின்காந்த கோட்பாடு ===
{{main|மின்காந்த அலைகள்}}
[[File:light-wave.svg|360px|thumb|A [[Polarization (waves)|linearly polarised]] light wave frozen in time and showing the two oscillating components of light; an [[electric field]] and a [[magnetic field]] perpendicular to each other and to the direction of motion (a [[transverse wave]]).]]
 
1845-இல் [[மைக்கேல் பரடே|மைக்கேல் ஃபாரடே]] என்பார், நேரியல் முனையமைவுறுபெற்ற ஒளியின் முனையமைவுறு தளமானது, ஒளியானது [[காந்தப்புலம்|காந்தப் புலத்தின்]] திசையில் ஒரு மின்கடத்தாப் பொருளின் ஊடாக செல்லும்போது சுழற்றப்படுகிறது எனக் கண்டறிந்தார்; இவ்விளைவு [[ஃபாரடே சுழற்சி]] என்றழைக்கப்படுகிறது.<ref>Longair, Malcolm. ''Theoretical Concepts in Physics'' (2003) p. 87.</ref> இவ்விளைவே ஒளிக்கும் [[மின்காந்தவியல்|மின்காந்தவிய]]லுக்கும் தொடர்புள்ளது எனத் தெரிவித்த முதல் நிகழ்வாகும். 1846-இல் ஃபாரடே, ஒளியானது காந்தப்புல வரிகளினூடாக பரவும் இடையூறுகளாக இருக்கலாம் என ஐயமுற்றார்.<ref>Longair, Malcolm. ''Theoretical Concepts in Physics'' (2003) p. 87</ref> ஒளியானது அதிக அதிர்வெண் கொண்ட மின்காந்த அதிர்வாகும், அவை ஈதர் போன்ற ஊடகம் ஏதுமின்றியும் பயணிக்கும் என்று 1847-இல் ஃபாரடே தன் கோட்பாட்டை வெளியிட்டார்.
 
ஃபாரடேயின் இந்த ஆய்வு முடிவுகள் [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]] என்பவருக்கு மின்காந்தவியல் மற்றும் ஒளியைப் பற்றி ஆராய்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது. ஊடகமற்ற வெளியில் பயணிக்கும் மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட மாறாத வேகத்தில் பயணிக்கும் என்று மாக்சுவெல் கண்டறிந்தார்; அவ்வேகம், முன்னரே கண்டறியப்பட்ட ஒளியின் வேகத்தோடு ஒத்திருந்தது. இதன்மூலம், ஒளியானது மின்காந்த அலைகளே என மாக்சுவெல் திட்டவட்டமாக முடிவெடுத்தார்; இதனை 1862-ஆம் ஆண்டு On Physical Lines of Force எனும் சஞ்சிகையில் பதிப்பித்தார். 1873-இல் அவர் ''மின்னியல் மற்றும் காந்தவியல் ஆய்வுக்கட்டுரை''யைப் (Treatise on electricity and magnetism) பதிப்பித்தார், அதில் மின் மற்றும் காந்தப் புலன்களின் பண்புகளை கணிதவியல் மாதிரிகளில் காட்டியிருந்தார்; இதிலிருந்த சமன்பாடுகள் [[மாக்சுவெல் சமன்பாடுகள்]] என்று இன்றளவும் அறியப்படுகின்றன. இதன் பின்னர், ஹென்ரிக் ஹெர்ட்சு என்பவர் தமது ஆய்வகத்தில் ரேடியோ அலைகளை உருவாக்கி மாக்சுவெலின் தத்துவங்களை உறுதிப்படுத்தினார்; அவரது ஆய்வில் அவர் உருவாக்கிய ரேடியோ அலைகள் கட்புலன் ஒளியைப் போலவே, அதாவது எதிரொளித்தல், விலகல், விளிம்பு விளைவுப் பண்புகளைக் கொண்டிருந்ததைக் கண்டார். மாக்சுவெலின் கோட்பாடு மற்றும் ஹெர்ட்சின் ஆய்வுகளே நவீன வானொலி, தொலைக்காட்சி, ராடார், மின்காந்தப் படமாக்கல், கம்பியற்ற தொலைத்தொடர்புகள் உருவாகக் காரணமாக அமைந்தன.
 
பகவக் கோட்பாட்டில் (குவாண்டம் கோட்பாடு), ஃபோட்டான்கள் மாக்சுவெல் மின்காந்தக் கோட்பாட்டில் வரும் அலைகளின் [[அலைச் சிப்பம்|அலைச் சிப்ப]]ங்களாகக் கொள்ளப்படுகின்றன. மாக்சுவெலின் மின்காந்தக் கோட்பாட்டால் விவரிக்க இயலாத கட்புலன் ஒளி விளைவுகளை விவரிக்க பகவக் கோட்பாடு தேவைப்படுகிறது (எ-டு: [[நிறமாலை வரி]]கள்).
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது