மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathan பயனரால் மெக்சிகோ, மெக்சிக்கோ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: சரியான உச்சரிப்...
No edit summary
வரிசை 55:
 
கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[தோல்ட்டெக் நாகரிகம்|தோல்ட்டெக்]], [[தியோத்திகுவாக்கான் நாகரிகம்|தியோத்திகுவாக்கான்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[மாயா நாகரிகம்|மாயா]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான [[தெனோச்தித்லான்|மெக்சிக்கோ-தெனோச்தித்லானில்]] இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் [[புதிய எசுப்பெயின்|புதிய எசுப்பெயினின்]] வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]], அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த [[என்ரிக் பீனா நீட்டோ]] பதவி ஏற்றுள்ளார்.<ref>http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78480</ref>
 
மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு [[பிரதேச வல்லரசு]]ம், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு|பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின்]] முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக [[உலக வங்கி]]யால் கணிக்கப்படுகிறது. இது [[புதுத் தொழில்மய நாடு|புதுத் தொழில்மய நாடாக]] இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய [[வாங்கும் திறன் சமநிலை]]யையும் கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது