மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
*வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் மிதிவெடி அபயாத்தில் உள்ள மக்களை தனித்தனியே சந்திப்பதால் அவர்களுடைய பிரச்சினைகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களின் நடத்தை குணாதியங்களுக்கு ஏற்ப மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க இயலும்.
**இதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால் பெரும்பாலும் ஆண்கள் உழைக்கபோய்விடுவதால் பெண்களே வீட்டில் உள்ளதால் பெண் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களையே இதற்கு அனுப்புவது சிறந்தது. மிதிவெடி வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பெரிதும் ஆண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிதிவெடி அபாயக் கல்வியின்போது வீட்டில் உள்ள பெண்களிற்கு துண்டுப்பிரசுரம் போன்றவற்றை வழங்கி உங்கள் வீட்டுக்காரருக்குச் சொல்லுங்கள் என்று கூறினாலும் கூட இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்றுஎன்பது ஆய்ந்தறியப்படவில்லைஆய்ந்தறியப்படவேண்டும். இம்முறையில் கூடுதலான மக்களைச் சந்திப்பது கடினமானது.
*மிதிவெடி அபாயக் கல்வி காட்சிகள்
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் அதிகமான மக்களை குறைந்த நேரத்தில் அணுக இயலும். இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த திரைப்படத்துடன் மிதிவெடிகள் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்களுடன் சில சமயம் மிதிவெடித் தோட்டம் ஊடாகவும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பலசமயங்களில் [[வில்லுப் பாட்டு]], [[நாடகங்கள்]] காத்தவராயன் கூத்து போன்றவற்றின் ஊடாகவும் மக்களை இப்பிரச்சாரங்கள் சென்றடைகின்றது.
**இதில் உள்ள சிக்கள் என்னவென்றால் இம்முறைமூலம் யார் யாருக்கு விளங்கியிருக்கிறது என்பதை உய்தறிவது கடினமானது. தவிர சீரான மின்சார இணைப்பைப் பெறுவதும் கடினமானது.
*ஊடகங்கள்
**இதில் உள்ள நன்மைகள் என்னவென்றால் அதிகமான மக்களைச் சென்றடையும். சில ஊடகங்களான [[முகப்புநூல்]] போன்றவற்றில் இலகுவாகப் பின்னூட்டதையும் பெற்றுக்கொள்ளலாம். முகப்புநூல் இலவசமானது எனவே இதனூடான பிரச்சாரங்கள் ஏனைய முறைகளுகளுடன் ஒப்பிடுகையில் மலிவானது மாத்திரம் அல்லாமல் கூடுதலான மக்களையும் சென்றடையலாம். மிதிவெடி அபாயக் கல்வியின் பிரபலத்தையும் பன்மடங்காக்கூடியது.
**இதிலுள்ள சிக்கல்கள் என்னவென்றால் எல்லா ஊடகங்களும் பிரபலாமானவை அல்ல, சில தொலைக் காட்சிகள் தொல்லைக் காட்சிகளாகி எள்ளி நகையாடும் வண்ணம் குறைவான பார்வையாளர்களை கொண்டுள்ளது. தவிர எரிச்சலூட்டும் விளம்பரங்களும் சுவாரசியத்தைக் குறைத்து விடுகிறது. இவ்வூடகங்களில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் அபாயத்தைக் கண்டுணர்ந்தவர்கள் அல்ல. மிதிவெடி அபாயத்தில் உள்ளவர்கறிக்கு மின்சார வசதிகள் பெரும்பாலும் இல்லாத்தால் இதுவும் நேரடியாக அம்மக்களைச் சென்றடையும் என்று கூறுவதற்கு இல்லை.
*சுவரொட்டிகள் - இதில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் ஒளிப்படங்கள் உள்ள சுவரொட்டி மிதிவெடி அபாயக் கல்வியை நடத்தும் அமைப்பின் தொலைபேசி இலக்கத்துடன் ஒட்டப்படும்.
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் இந்தச் சுவரொட்டிகள் எந்நேரமும் அங்கே இருக்கும் என்பதால் பிரயோசனமானது.
**இதில் உள்ள சில சிக்கல்கள் என்னவெறால்என்னவென்றால் தொலைபேசி இலக்கங்கள் இருந்தாலும் அநேகமாக யுத்தம் நடந்த இடங்களில் இன்னமும் மின்சார வசதிகிடையாது ஆகவே [[தொலைபேசி]]யே [[நகர்பேசி]] வசதியோ கிடையாது.
 
மிதிவெடி அபாயக் கல்வி பொதுவாக ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டே வழங்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது