மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
==மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்==
===பொதுத்தகவல்கள்===
*வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்
====சுவர் ஓவியங்கள்====
இம்முறை அநேகமான பாடசாலைகளின் சுவர்களினல் மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களின் அபாயம் பற்றி தூரிகை கொண்டு ஓவியம் வரையப்படும்.
*நன்மைகள்: பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்க இலகுவானது.
*சிக்கல்கள்: பாடசாலை ஓவியர்களுக்கு மிதிவெடி அபாயக் கல்வி பற்றித் தெளிவான விளக்கம் இருக்கவேண்டும்.
====கண்காட்சிகள்=====
இம்முறை அநேகமாகத் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தயாரித்த மிதிவெடி அபாயக் கல்வி சம்பந்தமான திரைப்படமும், மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய ஒளிப்படங்களுடன் சிலசமயம் பல்லூடகங்களும் இதில் பயன்படுத்தப்படும்.
*நன்மைகள்: கூடுதலான மக்களை குறைவான நேரத்துள் சென்றடைய சாலச் சிறந்தது.
*சிக்கல்கள்: ஒவ்வொருவருக்கும் எவ்வளவு விளங்கியிருக்கிறது என்பதைக் கண்டறிவது கடினமானது.
=====துண்டுப்பிரசுரங்கள்=====
இம்முறை பெரும்பாலும் திருவிழாக்கள், பெருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தால் பரிசீலிக்கப்பட்டு அனுமதியளித்த துண்டுப்பிரசுரங்களே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
*நன்மைகள்: இலகுவானது.
*சிக்கல்கள்: மிதிவெடி அகற்றும் அமைப்புக்களது தொலைபேசிகள் அடிக்கடி மாற்றமடைவதுடன் அநேகமான அமைப்புக்கள் இலங்கையை விட்டு நீங்கும் நிலையும் காணப்படுகிறது. ஒரு காலத்தின் பின்னர் தொலைபேசி இலக்கங்கள் பயனற்றதாகிவிடலாம்.
====வானொலி====
இம்முறையில் பலரை இலகுவாகச் சென்றடையலாம்.
*நன்மைகள்:தொலைக்காட்சிகள் போலன்றி வானொலியில் வேலைசெய்தவாறே கேட்கலாம் என்பதால் கூடுதானவர்கள் வானொலியை விரும்புகின்றனர்.
*சிக்கல்கள்: எவ்வளவு பேர் இதைப் புலன் செலுத்தி அவதானமாகக் கேட்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது ஓர் பொழுதுபோக்கு ஊடகமாகவே வகைபிரிக்கப்படுகிறது. பல ஊடகத்தினர் தமிழை சரியாக உச்சரிக்காமல் ஒய்யாரம் (ஸ்டைல்) ஆக உச்சரிப்பதால் பலசமயங்களில் தமிழ் சரிவர விளங்குவதில்லை.
 
*வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்
**இதில் உள்ள நன்மை என்னவென்றால் மிதிவெடி அபயாத்தில் உள்ள மக்களை தனித்தனியே சந்திப்பதால் அவர்களுடைய பிரச்சினைகளை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவர்களின் நடத்தை குணாதியங்களுக்கு ஏற்ப மிதிவெடி அபாயக் கல்வியை வழங்க இயலும்.
**இதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால் பெரும்பாலும் ஆண்கள் உழைக்கபோய்விடுவதால் பெண்களே வீட்டில் உள்ளதால் பெண் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களையே இதற்கு அனுப்புவது சிறந்தது. மிதிவெடி வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் பெரிதும் ஆண்களே பாதிப்புக்குள்ளாகிறார்கள். மிதிவெடி அபாயக் கல்வியின்போது வீட்டில் உள்ள பெண்களிற்கு துண்டுப்பிரசுரம் போன்றவற்றை வழங்கி உங்கள் வீட்டுக்காரருக்குச் சொல்லுங்கள் என்று கூறினாலும் கூட இது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பது ஆய்ந்தறியப்படவேண்டும். இம்முறையில் கூடுதலான மக்களைச் சந்திப்பது கடினமானது.
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது