மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
*சிக்கல்கள்: இவ்வாறு பயிற்ச்சி எடுத்தவர்களுக்கு எந்தவொரு சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. எனவே சான்றிதழ் பெற்றவர்களுக்கும் சான்றிதழ் பெறாதவர்களுக்கும் வேறுபடுத்தி இனம் காணமுடியாது.
===சமுகத் தொடர்பாடல்கள்===
மிதிவெடி அகற்றும் அமைப்புக்களும் மக்களுக்கு இடையே தொடர்பாடல்களை வலுப்படுத்துவதே சமூகத் தொட்ர்பாடல் ஆகும். மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை மக்கள் இனம் கண்டால் மிதிவெடி அபாயக் கல்வி அமைப்புக்கள் மிதிவெடி அகற்றும் அமைப்புக்களுக்கு அறித்து அவற்றை அகற்றுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இதற்கு உரிய மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய விண்ணபத்தை நிரப்பி உரிய அமைப்புக்களுக்கு அனுப்பி வைப்பர் இதில் தகவல்தந்தவரின் பெயர், முகவரி, தொலைபேசி இருப்பின் தொலைபேசி இலக்கம் ஆகிய தகவலுடன் அண்ணளவான வரைபடம் ஒன்றும் மிதிவெடி அல்லது வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளின் வரைபடம் அல்லது ஒளிப்படமும் இணைக்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் மிதிவெடி அகற்றும் அமைப்பு இல்லாதவிடத்து இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானக் மிதிவெடி அகற்றும் பிரிவிற்கு அறிவிக்கப்படும். மிதிவெடியோ வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருளோ அடையாளம் காணப்பட்டால் அது அகற்றப்படும்வரை மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் மக்களை விளிப்புடன் இருக்குமாறு கூறுவதுடன் அது அகற்றும் வரை மிதிவெடி அகற்றும் அமைப்புடன் தொடர்பில் இருப்பர். மிதிவெடி அபாயக் கல்வியில் ஈடுபடுவர்கள் இடைக்கிடையில் அப்பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் அமைப்புக்களின் அணித்தலைவர்களுடன் கலந்துரையாடு மிதிவெடி அகற்றுவதற்கு வேண்டிய ஒத்தாசைகளைப் புரிவர்.
 
மிதிவெடி அகற்றும் அமைப்பினருக்கு உள்ள பிரச்சினைகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மிதிவெடிகளை அடையாளம் காணும் முள்ளுக்கம்பிகளை அகற்றுதல் போன்றவற்றை அகற்றவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்படுவர். மிதிவெடி அகற்றுபவர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் கேட்கப்படுவர், எடுத்துக்காட்டக அவை புதைக்கப்பட்ட இடங்கள் தெரிந்தால் மிதிவெடி அகற்றுபவர்களுக்கு அறியத்தருமாறு கோரப்படுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது