"ஆபிரகாம் லிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
== இளமை ==
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார் ஆபிரகாம் லிங்கன். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு [[தச்சர்]]. சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ்(Nancy Hanks). காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.
 
ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில்( black hawk war ) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.
 
== பணிகள் ==
தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து [[வழக்குரைஞர்]] ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்
 
== அரசியல் ==
லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy )அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்"(emancipation proclamation )ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.
 
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப்போரில்]] இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.
 
4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 ல்இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
 
== மக்களாட்சி விளக்கம் ==
1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் ( gettyburgGettysburg speech )"விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அரசாங்கம்,மக்களுடைய அரசாங்கம் ,மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது." எனக் குறிப்பிட்டார்.
 
{{cquote| "மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி" }}
== மத மற்றும் தத்துவ நம்பிக்கைகள்==
 
பல கல்வியாளர்கள் ஆபிரகாம் லிங்கனின் மத மற்றும் தத்துவ கொள்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தும் எழுதியும் வந்துள்ளனர். உதாரணமாக லிங்கனது மத சார் கருத்துக்கள் அவரது சொந்த மத நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக இருந்ததா அல்லது பெரும்பாலாக மறுபிரவேச புரொட்டஸ்டன்ட்டு காரர்களாக இருந்த அவரது பார்வையாளர்களை கவரும் கருவியாக அவர் பயன்படுத்தினாரா என்பது போன்றவையாகும். மனைவியுடன் அடிக்கடி தேவாலயத்துக்கு செல்லும் வழக்கம் கொண்டவராக லிங்கன் இருந்தபோதிலும் அவர் ஒருபோதும் எந்த தேவாலயத்திலும் அங்கத்தவராக இணையவில்லை. இருப்பினும் லிங்கன் [[விவிலியம்|விவிலியத்தில்]] (கிறிஸ்துவகிறித்துவ வேத நூல் ) மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துள்ளார். அத்துடன் பல தடவைகள் அவர் விவிலியத்தை புகழ்ந்தும் மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.
 
== வரலாற்றுப் புகழ்==
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1178351" இருந்து மீள்விக்கப்பட்டது