இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
இசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (சல்) அவரளிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது,
 
*"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: '''"அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும்''' உள்ளன. வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர். எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 202:189 )
 
மேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.
 
*"அவன் தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். '''ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும்''' நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." (திருக்குர்ஆன் 10:5)
 
*"இன்னும் '''(உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப்''' போலாகும் வரையில் '''சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை)''' ஏற்படுத்தி இருக்கிறோம்." (திருக்குர்ஆன் 36:39)
[[படிமம்:Muharram_1433.jpg|thumb|குறிப்பிடத்தக்க [[இசுலாமிய நாட்காட்டி]]; இசுலாமிய [[நாள்]] : 1, சனிக்கிழமை; இசுலாமிய [[மாதம்]] : முஹர்ரம்; இசுலாமிய [[ஆண்டு]] : 1433AH; [[பயன்பாடு]] : பன்னாட்டு பொது சந்திர நாட்காட்டி; [[மொழி]]கள் : [[தமிழ்]], [[ஆங்கிலம்]] & [[மலையாளம்]]; ஒத்த [[கிரிகோரி நாட்காட்டி]] நாட்கள் : 26.11.2011 (சனிக்கிழமை) முதல் 24.12.2011 (சனிக்கிழமை) வரை ; மொத்த நாட்கள் : 29 ]]
 
*"வானங்களையும், பூமியையும் '''படைத்த நாளிலிருந்தே''' அல்லாஹ்விடம் அவனுடைய பதிவெட்டில் '''மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு''' ஆகும். அவற்றில் '''நான்கு தடுக்கப்பட்டவை'''. அதுவே நிலையான மார்க்கம். எனவே, '''அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்'''..." (திருக்குர்ஆன் 09:36)
 
இசுலாமிய மாதங்கள் பெயர்கள் பின்வருமாறு:<ref>{{cite encyclopedia | author =B. van Dalen |coauthors = R.S. Humphreys; A.K.S Lambton, ''et al.'' | editor = P.J. Bearman, Th. Bianquis, [[Clifford Edmund Bosworth|C.E. Bosworth]], E. van Donzel and W.P. Heinrichs | encyclopedia =[[Encyclopaedia of Islam]] Online| title = Tarikh| publisher = Brill Academic Publishers | id = ISSN 1573-3912}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது