பெஞ்சமின் பிராங்கிளின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: diq:Benjamin Franklin
No edit summary
வரிசை 16:
|footnotes=
}}
'''பெஞ்சமின் பிராங்கிளின்''' (''Benjamin Franklin''; ([[ஜனவரி 17]], [[1706]] – [[ஏப்ரல் 17]], [[1790]]) என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா]]வை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், [[அறிவியல்|அறிவியலாளர்]], கண்டுபிடிப்பாளர் ஆவார். [[மின்னியல்|மின்னியலில்]] இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் [[இயற்பியல்]] சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். [[அமெரிக்க ஆங்கிலம்|அமெரிக்க ஆங்கில]] எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.
 
'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும்(bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.<ref> [http://urssimbu.blogspot.com/2012/01/benjamin-franklin-historical-legends.html#ixzz22POUIptC| மாணவன் இணையதளம்]</ref>
 
== இளமை ==
1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் பிராங்கிளின். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்தவர் அவர். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தாயரித்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்
 
== எழுத்தும் அச்சுத்தொழிலும் ==
பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த அவருடைய பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துத் தீர்த்து ஆனந்தம் அடைவார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
 
 
 
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெஞ்சமின்_பிராங்கிளின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது