முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

586 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
நைல் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், [[பாலைவனச் சோலை]]களிலும் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைச் செதுக்கற் சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டில் வேடுவர்-உணவுசேகரிப்போர், மீன்பிடிப்போர் பண்பாடுகள் உருவாயின. காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது இரண்டினாலும், கிமு 8000 ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கிச் சகாராப் பாலைவனம் உருவானது. தொடக்ககால இனக்குழுக்கள் நைல் ஆற்றங்கரைகளை அண்டி இடம் பெயர்ந்து, நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்பட்ட சமூகத்தையும் உருவாக்கினர்.<ref>Midant-Reynes, Béatrix. ''The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings''. Oxford: Blackwell Publishers.</ref>
 
ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில், நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது.<ref>{{cite web|url=http://www.worldtimelines.org.uk/world/africa/nile_valley/6000-4000BC|title=The Nile Valley 6000–4000 BC Neolithic|publisher=The British Museum|year=2005|accessdate=21 August 2008}}</ref> புதியகற்காலத்தில், மேல் எகிப்திலும், கீழ் எகிப்திலும், பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. [[பாடேரியப் பண்பாடு]]ம், தொடராக உருவான [[நக்காடாப் பண்பாடு]]களும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. கீழ் எகிப்தின் மிகப் பழைய களமான [[மெரிம்டா]], பாடேரியப் பண்பாட்டுக்கு 700 ஆண்டுகள் முந்தியது. ஒரேகாலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட இவர்கள் வணிகம் மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மிகவும் பழைய எகிப்தியப் படவெழுத்துக்கள், கிமு 3200 ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த, வம்சங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நக்காடாக் கால மட்பாண்டங்களில் காணப்படுகின்றன.<ref>Bard, Kathryn A. Ian Shaw, ed. ''The Oxford Illustrated History of Ancient Egypt''. Oxford: Oxford University Press, 2000. p. 69.</ref>
 
===பண்டை எகிப்து===
கிமு 3150ல், மெனெசு மன்னர், கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல வம்சங்கள் வரிசையாக எகிப்தை ஆண்டன.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1182149" இருந்து மீள்விக்கப்பட்டது