எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
 
===பண்டை எகிப்து===
கிமு 3150ல், மெனெசு மன்னர், கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல வம்சங்கள் வரிசையாக எகிப்தை ஆண்டன. எகிப்தியப் பண்பாடு இந்த நீண்ட காலப் பகுதியில் செழித்திருந்ததோடு, [[சமயம்]], [[கலை]]கள், [[மொழி]], பழக்க வழக்கங்கள் போன்றவை தொடர்பில் தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே இருந்தது. ஒன்றுபட்ட எகிப்தின் முதல் இரண்டு வம்ச ஆட்சிகளும், கிமு 2700 தொடக்கம் 2200 வரையான பழைய இராச்சியக் காலத்தின் அடிப்படைகளை அமைத்தன. இக்காலத்தில், மூன்றாம் வம்சக் காலத்து யோசர் (Djoser) பிரமிடு, நாலாம் வம்ச கிசா பிரமிடுகள் உட்பட்ட பல பிரமிடுகள் கட்டப்பட்டன.
 
முதல் இடைக்காலம், 15 ஆண்டுகளை உள்ளடக்கிய அரசியல் கிளர்ச்சிகளைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. நைல் ஆற்றில் கூடிய நீர் வரத்தும், அரசின் உறுதிப்பாடும் நடு இராச்சியப் பகுதியில், நாட்டில் புதிய செழிப்பைத் திரும்பவும் கொண்டுவந்தன. இது, கிமு 2040 ஆம் ஆண்டில் [[மூன்றாம் அமெனெம்கத்]] காலத்தில் உயர் நிலையை எட்டியது. இரண்டாம் ஒற்றுமையின்மைக் காலம் எகிப்தை வெளியாரான செமிட்டிய [[ஐக்சோசு]]க்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கிமு 1650ல், ஐக்சோசியர்கள் கீழ் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி [[அவாரிசு]] என்னும் புதிய தலைநகரையும் நிறுவினர். முதலாம் அகுமோசு என்பவன் மேல் எகிப்திலிருந்து படையெடுத்து வந்து பதினெட்டாவது வம்ச ஆட்சியை உருவாக்கினான். இவன் தலைநகரை மெம்பிசில் இருந்து தேபிசுக்கு இடம் மாற்றினான்.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது