கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (bot adding hidden cat AFTv5Test & gen cleanup)
சிNo edit summary
 
== வரலாறு ==
 
[[இந்தியா]], [[மியன்மார்]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (''Gallus gallus'') இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.<ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date= |url=http://www.accessexcellence.org/WN/SUA04/protochicken.html |title=PROTOCHICKEN |format=html |work=Proceedings of the National Academy of Science, v.91 |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date=December 15, 2000 |url=http://www.geocities.com/hs_wong33/Oneworld.htm |title=REDROVING FOWL |format=htm |work=Down To Earth |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> இக்கோழிவளப்பு பின்னர் ஏனயப் பகுதிகளுக்கும் பரவியதாக ஆய்வாளகள் கருதுகின்றார்கள்.
 
== வளர்ப்பு முறைகள் ==
 
கோழியானது பண்ணை மூலமாகவும் பண்ணை இல்லாமலும் (கட்டற்ற கோழி வளர்ப்பு) வளர்க்கப்படுகிறது. வணிக நோக்குடன் வளர்ப்பதற்கு பண்ணை முறையே உகந்தது. பண்ணை முறைக் கோழி வளர்ப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம் அவையாவன கூண்டு இல்லா முறை, கூண்டு முறை என்பனவாகும். கூண்டு முறை முட்டையிடும் கோழிகளுக்காக பயன்படுவதோடு கூண்டு இல்லா முறை இறைச்சிக் கோழிகளுக்காக பயன்படுகிறது.
 
== கட்டற்ற கோழி வளர்ப்பு ==
 
[[image:freerangechickens.jpg|thumb|200px|கட்டற்ற கோழி வளர்ப்பு முறையில் உணவு வழங்கப்படுகிறது.]]
 
இம்முறையின் கீழ் சிறிய அளவிலான கோழிவளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே ஆரம்பத்தில் செய்யப்பட்ட கோழிவளர்ப்பு முறையுமாகும். இம்முறையின் கீழ் கோழிகளின் நடமாட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்கப்படுவதில்லை. இரவில் தங்குவதற்கும் முட்டை போன்றவை இடுவதற்கும் ஒரு கூடு காணப்படும். இம்முறையின் கீழ் செயற்கை வேதியல் பொருட்களின் பயன்பாடு குறைவாக அல்லது பூச்சியமாக காணப்படும். கோழிகளுக்கான உணவாக வீட்டில் எஞ்சும் உணவுப் பொருட்கள் இடப்படுவதோடு கோழிகள் தாமாகவே மண்புழு, பூச்சிகள் போன்றவற்றையும் தேடி உண்கின்றன. இம்முறையின் கீழ் கோழிகள் சுதந்திரமாக நடமாட மற்றும் தமது இயற்கை வாழ்கை முறைக்கு ஒத்த வாழ்வை வாழக்கூடியன ஆகையால் விலங்கு உரிமை ஆர்வளர்கள் இம்முறையை ஆதரிக்கின்றனர்.
 
== பண்ணை முறைக் கோழி வளர்ப்பு ==
=== கூண்டு இல்லா முறை ===
 
[[படிமம்:கூண்டு இல்லா கோழி பண்ணை.jpg|left|thumb|250px|கூண்டு இல்லாக் கோழிப் பண்ணை]]
இம்முறையின் கீழ் கோழிகள் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கும். இம்முறை முட்டை மற்றும் இறைச்சிக் கோழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தரை மரத்தூள், நிலக்கடலைக் கோதுகள் போன்ற ஈரப்பதனை உரியக்கூடிய பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். கோழிகளுக்கான உணவு, நீர் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுக்கும். கோழிகளின் நடமாட்டம் அறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும். இது செலவு குறைவான முறை ஆனால் முட்டை உற்பத்தி கூண்டு முறையை விட குறைவாக இருக்கும். தீவனம் மிகுதியாக வீணாகும். அதிக இடம் தேவை.
{{clear}}
É
 
=== கூண்டு முறை (Battery Hen) ===
 
இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs1">{{cite web |url=http://www.factoryfarming.com/eggs.htm |title=<font>'''<font color="#cc0000">Laying Hens</font>'''</font> |accessdate=2007-09-30 |date= |work= |publisher=factoryfarming.com}}</ref> கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து கொலைச் செய்யப்படும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs2">{{cite web |url=http://www.thehenshouse.co.uk/factsandfigures.html |title= Facts and Figures - battery hens |accessdate=2007-09-30 |publisher=Battery Hen Welfare Trust}}</ref>
 
 
== வளர்க்கப்படும் இடங்கள் ==
 
கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும் , 2ம் இடத்தில் [[சீனா]]வும், 3ம் இடத்தில் [[பிரேசில்|பிரேசிலும்]], 4ம் இடத்தில் [[மெக்சிகோ]]வும், 5ம் இடத்தில் [[இந்தியா]]வும், 6ம் இடத்தில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வும், 7ம் இடத்தில் [[தாய்லாந்து]]ம் உள்ளன.
 
=== இந்தியாவின் கோழி வளர்ப்புத்துறை ===
 
இந்தியாவில் இருந்து பெருமளவிலான கோழிகள் [[இலங்கை]]க்கும் (50%), [[வங்காள தேசம்|வங்காள தேசத்திற்]]கும் (32.5%), [[நேபாளம்|நேபாளத்திற்கும்]] (8.2%) ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் இருந்து பெருமளவிலான முட்டைகள் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்]] [[குவைத்]]துக்கும் [[ஓமான்|ஓமனு]]க்கும் ஏற்றுமதியாகின்றன. முட்டை தூளானது [[ஜப்பான்|ஜப்பானு]]க்கும் [[போலந்து]]க்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.
 
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
 
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1184309" இருந்து மீள்விக்கப்பட்டது