புதுவை இரத்தினதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.179.81.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1187566 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 16:
 
==வெளிவந்த ஒலிநாடக்கள்==
* களத்தில் மலர்ந்தவை (01.02.1989)
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" இலண்டனில் வெளியிடப்பட்டது.
 
போராட்ட வரலாற்றையும், போராட்ட வாழ்பனுவங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். எல்லோரும் படிக்க வேண்டிய கவிதை நூல்.
 
கவிதைகளில் ஒன்று
 
வேண்டும் வரமொன்று
 
முகிலிறங்கிக் தவழும் முலையென
கிடக்கிறது மலை.
பனிவிழுந்த பச்சை இலைகளின்மேல்
வெளிச்சம் தூவுறான் வெய்யோன்.
காலுக்கடியில் கலகலத்தவாறு
ஓடுறது நீரோடை.
குமரியழகோடு கிடக்கும் மரங்கள்தழுவி
போகும் வழியில்
ஈர இதழ்கொண்டு என்னையும் உரசி
மன்மததேசம் போகிறது மலைக்காற்று.
என்னூருக்கில்லாத எழில்கொண்டு
இலங்கிறது இவ்வூர்.
"காணக் கோடிவிழி காணாது" என
இங்கொருநாள் வாழ்ந்தவனே எழுதியிருப்பான்.
இத்தனை அழகும் எனக்குமுரியதென
எத்தனை கவிதை எழுதியிருப்பேன்.
பொய்யாகி
பொசுக்கென தீயெரித்துப்போனது
அக்கவிதையை.
வாழ்வின் இறுதியிலாயினும்
இங்கு வாழ்ந்திறக்க அவாவுற்றேன்.
என்கனவில் கல்லெறிந்து கலைத்தனர்
பாவியர்.
மீண்டுமொருமுறை பார்க்கக் கிடைத்ததே
போதுமெனக்கு.
இனி என்னூரின் நாயுருவிப் பற்றையிடையே,
இலந்தை மரத்தின் சிறுநிழலின் கீழே
படுத்தபடி உயிர்நீக்கும் பாக்கியம் தா.
நேற்றென் பூட்டனையும்,
பாட்டனையும்,
நாளை எந்தையையும் எரிக்கும் சுடலையில்
நானும் எரியும் வரம்வேண்டும்.
தருவாயா இறைவா?
 
==இவர் எழுதிய பாடல்களில் சில==
"https://ta.wikipedia.org/wiki/புதுவை_இரத்தினதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது