பிரான்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது.
 
பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. இந் நாட்டின் முக்கியமான குறிக்கோள்கள் [[மனிதரினதும் குடிமக்களதும் உரிமைகள் சாற்றுரை]]யில் அடங்கியுள்ளன. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. [[வாங்கு திறன் சமநிலை]] அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், [[பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அடிப்படையில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரியது. [[திரட்டிய வீட்டுச் செல்வம்|திரட்டிய வீட்டுச் செல்வ]] அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது.
 
பிரான்ஸ் [[ஐக்கிய நாடுகள்]] சபை, [[ஜி8]] நாடுகள், [[ஐரோப்பிய ஒன்றியம்]] ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. [[ஐக்கிய நாடுகள்]] சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.
 
பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 7582 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய கோத்திர மக்களான பிராங்க் என்பவர்களில் இருந்து தோன்றியதாகும்.
 
==பெயர்==
பிரான்ஸ் என்ற பெயர் மேற்கு உரோம இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய யேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் ஏற்பட்டது. பிரான்சு என்பது, "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள்தரும் ''பிரான்சியா'' ''(Francia)'' என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. பிராங்க் என்னும் சொல்லின் பிறப்புக் குறித்துப் பல்வேறு கொள்கைகள் நிலவுகின்றன. ஒரு கொள்கையின்படி, பிராங்க் மக்கள் பயன்படுத்தியதும் [[முன்-செருமானிய மொழி]]யில் ''பிராங்கோன்'' என்று வழங்கியதுமான எறிகோடரியின் பெயரில் இருந்து பிராங்க்குகளுக்குப் பெயர் ஏற்பட்டது. பண்டைச் செருமானிய மொழியில் பிராங்க் என்பது [[அடிமை]]கள் அல்லாத விடுதலை கொண்ட மக்களைக் குறித்தது என்றும், இதுவே பிராங்குகளுக்கு அப்பெயர் ஏற்படக் காரணமாகியது என்றும் இன்னொரு கொள்கையின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது