தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தலைச்சங்காடு''' அல்லது ''' ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:27, 14 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

தலைச்சங்காடு அல்லது திருதலைச்சங்க நான்மதியம் எனப்படும் இத்திருத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது. . இங்கு பெருமான் சங்காரண்யேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

அமைந்துள்ள இடம்

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் திருதலைச்சங்க நான்மதியம் எனப்படும் இத்திருத்தலம் உள்ளது.

மூலவர்

சங்காரண்யேசுவரர், சங்கவனேஸ்வரர், சங்கருணாதேஸ்வரர்., நாண்மதியப்பெருமாள் , வென்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம்

தாயார்

தலைச்சங்க நாச்சியார் (சவுந்தர நாயகி)

தீர்த்தம்

சங்கு தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .

தல மரம்

புரசு

விமானம்

சந்திர விமானம்.

பெயர்க்காரணம்

பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும்அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர் கோயில்களுக்கும் இதனை சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் என கல்வெட்டு செய்தி கூறுகிறது.

தல வரலாறு

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு.

சிறப்பம்சம்

  • இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.
  • கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது.
  • ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர்.
  • உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள். கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஏராளமான சிவாலயங்கள் கட்டியுள்ளான். அதில் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்ட கோயில்களும் கட்டியுள்ளான். அப்படிப்பட்ட மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.
  • கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதி. நடுவில் முருகன் சன்னதி. வலது பக்கம் அம்மன் சன்னதி என அமைக்கப்பட்டிருக்கும்.
  • திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது. இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம் , வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி 2 பாசுரங்கள் இயற்றி உள்ளார். சம்பந்தரும் பாடியுள்ளார்.

நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்தோர் நால்வேதம்

சொலச்சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்

குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக்குயிலாலும்

தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத்தாழ்ந்தீர்.

(சம்பந்தர்)