அக்கியோ மொறிட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட ஒலிப்பதிவுக் கருவி தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவரிடம் சோனி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலைமை நிறுவன பொறுப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.
 
== இறுதிக்காலம் ==
தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்கியோ மொரீட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் இதழ் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்கியோ மொரீட்டாதான்.
 
== சிறப்பு ==
உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது,பிரான்ஸின் மிக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது,ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர்
ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.
 
== படைப்புகள் ==
இவரது தன்வரலாற்று நூல் மேட் இன் ஜப்பான்(Made in Japan) என்பதாகும். 1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரீட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.
 
 
== உசாத்துணை ==
* [http://urssimbu.blogspot.in/2011/02/sony.htm| SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்), மாணவன் இணைய தளம்]
 
 
"https://ta.wikipedia.org/wiki/அக்கியோ_மொறிட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது