ஆரியச் சக்கரவர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
[[File:Sri Lanka geopolitics, 1520s.png|180px|வலது|thumb|1520களில் யாழ்பான அரசு (வெள்ளை நிறம்)]]
 
'''ஆரியச் சக்கரவர்த்திகள்''' என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சியத்தை]] 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் [[ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்)|ஆரியச் சக்கரவர்த்தி]] வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும்<ref>Pathmanathan, ''The Kingdom of Jaffna'',p.11</ref> மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது [[பாண்டியர்]] ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து.<ref>“தென்னன் நிகரான செகராசன்</br>தென்னிலங்கைமன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”</ref><ref name="தமிழ் வழி">{{cite web | url=http://www.noolaham.net/project/04/364/364.htm | title=நாம் தமிழர் | publisher=கொழும்புத் தமிழ்ச் சங்கம் | accessdate=ஆகஸ்ட் 15, 2012 | author=பொ. சங்கரப்பிள்ளை (B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.)}}</ref> யாழ்ப்பாணத்தின் வரலாறு பற்றிக் கூறும் [[வையாபாடல்]], [[யாழ்ப்பாண வைபவமாலை]] போன்ற நூல்கள், யாழ்ப்பாண அரசு அரசனில்லாது இருந்தபொழுது, தமிழ்நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இளவரசனாலேயே இந்த வம்சம் ஆரம்பித்துவைக்கப் பட்டதாகக் கூறுகின்றன.
 
எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், [[குஜராத்]], கிழக்கிந்தியாவிலிருந்த [[கலிங்க நாடு|கலிங்க தேசம்]], தமிழ் நாட்டிலுள்ள [[ராமேஸ்வரம்]], [[சோழநாடு]] போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.
வரிசை 23:
இவ்வம்சத்தின் தோற்ற காலம் பற்றியும், கருத்து-எதிர்க்கருத்துகள் (வாதப் பிரதிவாதங்கள்) உண்டு. [[யாழ்ப்பாண வைபவமாலை]], [[வையாபாடல்]] போன்றவை முதலரசன் காலத்தை முறையே --க்கும், --க்கும் முன்தள்ளியுள்ளன. எனினும் தற்கால ஆய்வாளர்களான பத்மநாதன் (ஆங்கிலத்தில் யாழ்பான அரசு என்ற நூலை எழுதியவர்) போன்றோர், முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றே நம்புகிறார்கள். இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்களாகப் போர்த்துக்கீசருக்கு முன் 13 பெயர்களும், [[போர்த்துக்கீசர்]] காலத்தில் 6 பெயர்களுமாக மொத்தம் 19 [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்|அரசர்கள்]] குறிக்கப்படுகின்றனர். இவர்கள் [[பரராசசேகரன்]], [[செகராசசேகரன்]] என்ற [[சிம்மாசனம்|சிம்மாசனப்]] பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டு அரசாண்டார்கள்.
 
{{^}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரியச்_சக்கரவர்த்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது