பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் நிண்மப் பொருளே '''பனிக்கட்டி''' ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.
 
பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து [[வளிமண்டலம்|வளிமண்டலத்தினூடாக]] விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் '''[[பனித்தூவி]]''' எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது '''[[ஆலங்கட்டி மழை]]''' எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் ஈட்டு போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை '''[[பனி ஈட்டி]]''' (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை '''[[பனியாறு]]''' என்பர். [[கடல்]] நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை, அண்ணளவாக -1.8 °C (28.8 °F) ஐ அடையும்போது உறைந்து '''[[கடல் பனிக்கட்டி]]யாக''' (a ice) மாறும். [[நீராவி]]யானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனிக்கட்டியாக உறைந்து [[உறைபனி]] (Frost) என அழைக்கப்படும். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் [[பனிப்படுக்கை]] (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் ice[[பனிப்படுக்கை]] (Ice sheet) எனவும் அழைக்கப்படும். <ref name=DougBenn>{{cite book
| last = Benn
| first = Douglk
| authorlink =
| coauthors = David Evans
| title = Glaciers and Glaciation
| year = 1998
| publisher = Arnold
| location = London
| isbn = 0-340-58431-9
| unused_data = ISBN status = May be invalid - please double check
}}</ref><ref name=Bennett>{{cite book
| last = Bennett
| first = Matthew
| authorlink =
| coauthors = Neil Glasser
| title = Glacial Geology: Ice Sheets and Landforms
| year = 1996
| publisher = John Wiley and Sons Ltd.
| location = Chichester, England
| isbn = 0-471-96345-3
| unused_data = ISBN status = May be invalid - please double check
}}</ref><ref name="GreveBlatter2009">{{cite book
| author=Greve, R.; Blatter, H.
| year=2009
| title=Dynamics of Ice Sheets and Glaciers
| publisher=Springer
| doi=10.1007/978-3-642-03415-2
| isbn=978-3-642-03414-5}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது